நடிகர் விஜய் சேதுபதி ஆரம்ப காலத்தில் பல முன்னனி நடிகர்களுக்கு நண்பராக நடித்து வந்தார். பின்பு பீட்சா படத்தில் கதாநாயகனாக நடித்தார். தொடர்ந்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்து ‘மக்கள் செல்வன் ‘ என்று மக்களால் அழைக்கப்படுகிறார்.
 
       இவர் கதாநாயகனாக மட்டுமல்லாமல்,ரசிகர்கள் ரசனைக்கேற்ப எந்தவித கேரக்டர்களிலும் நடிக்க ஒப்புக் கொண்டவர். அவரைப் பொறுத்தவரை இது ஒரு சவாலாக இருந்தாலும் , வியாபார ரீதியாக , நம் படங்கள் பாதிக்கபடுமோ என்று நினைத்த தயாரிப்பாளர்களின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.
    
       ஏற்கனவே தான் தயாரித்து நடித்த,”ஆரஞ்சு மிட்டாய்” என்ற படத்தில் அப்பா வேடத்தில் நடித்தார். தற்போது காமெடியனான புரோட்டா சூரி, ஹீரோவாக களமிறங்கியுள்ளார். ஆனால் பலரால் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
 
      இந்நிலையில் சூரிக்கு அப்பாவாக ,அதே படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இன்னொரு அதிர்ச்சி செய்தி வெளியாகி உள்ளது. ‘ மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் போது , இப்படி அப்பா அளவுக்கு விஜய் சேதுபதி இறங்கி விட்டாரே ‘ என பலருக்கும் அதிர்ச்சியளித்துள்ளது.

By sowmiya