தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் பாலிவுட் சினிமாவிலும் கலக்கி வருகிறார். தமிழ், ஹிந்தி என இருமொழிகளிலும் அவர் திரைப்படங்கள் ஹிட் கொடுத்து வருகிறது. அதே போல நடிகர் விஜய் சேதுபதியும் பாலிவுட் சினிமாவில் கால் பதித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் பாலிவுட்டில் ரசிகர்களும்  அதிகரித்து வருகின்றனர்.
மேலும் தல அஜித் நடிக்கும் வலிமை படத்தை தமிழ்,ஹிந்தி உட்பட 5 மொழிகளிலும் வெளியிடுகின்றனர். இதை பார்த்த தளபதி விஜய்க்கும் இந்த ஆசை வந்துள்ளது .
தற்போது அவர் நடித்து வரும் தளபதி 65 படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம்,                      மலையாளம்,ஹிந்தி போன்றஅனைத்து மொழிகளிலும் தன் ரசிகர்களை கவரும் வகையில் கதையை உருவாக்குமாறு இயக்குனரை கேட்டுள்ளாராம். இதனால் தனக்கு பாலிவுட் சினிமாவில் வாய்ப்பு கிடைக்குமென விஜய் எதிர்பார்த்து வருகிறார்.

By sowmiya