HEALTH TIPS & LIFE STYLES

கால் வீக்கத்தை குறைக்க இந்த பத்து டிப்ஸ் யூஸ் பண்ணுங்க

தண்ணீர்: திரவம் தேங்குவதால் வீக்கம் ஏற்படுகிறது என்றாலும் தண்ணீர் குடித்தால் வீக்கம் குறையும். நாளொன்றுக்கு 8-10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். போதியளவு தண்ணீர் குடிக்க தவறினால், உடம்பில் திரவம் தேங்கி வீக்கம் ஏற்பட காரணமாக அமையும்.
ஐஸ் பேக், பேண்டேஜ்: காயம் காரணமாக கணுக்கால் மற்றும் பாதத்தில் ஏற்படும் வீக்கத்திற்கு ஐஸ் பேக் வைக்கலாம் அல்லது கம்ப்ரெஷன் பேண்டேஜ் அணிந்துகொள்ளலாம். குளிர்ந்த நீரில் கால்களை ஊறவைக்கலாம்.

கால் உயர்த்தி வைத்தல்: உட்காரும் போது அல்லது படுக்கும் போது கால்களை உயர்த்தி வைக்கலாம். இப்படி செய்யும் போது கால்களில் மீது எந்த சுமையும் வைக்கக் கூடாது. சுவற்றில் கால்களை வைத்து முதுகில் சாய்ந்துக்கொண்டும் இருக்கலாம்.

மது அருந்தக் கூடாது: மதுவானது உடலில் நீர் வற்றச் செய்து வீக்கத்தை அதிகரிக்கும். மது அருந்துவதை நிறுத்தி இரண்டு நாட்கள் கடந்தும் வீக்கம் நீடித்தால் மருத்துவரை அணுகவும்.

கல்லுப்பு: வெதுவெதுப்பான நீரில் ஒரு சிட்டிகை கல்லுப்பு கலந்து காலை ஊறவைத்தால் வீக்கம் மற்றும் வலி குறையும்.

எலுமிச்சை ஜூஸ்: உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் மற்றும் மிகுதியான திரவங்களை நீக்க எலுமிச்சை ஜூஸ் பருகலாம். எலுமிச்சை ஜூஸை தினமும் குடிக்கலாம்.

மக்னீசியம்: உடலில் நீர் தேங்க மக்னீசியம் குறைபாடு காரணமாக இருக்கலாம். எனவே, மக்னீசியம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். டோஃபூ, கீரை, முந்திரி, பாதாம், டார்க் சாக்லேட், புரொக்கோலி மற்றும் அவகேடோ ஆகிய உணவுகளில் மக்னீசியம் அதிகம் உள்ளது.

உப்பை குறைக்கவும்: உணவில் உப்பு குறைவாக எடுத்துக் கொண்டால் திரவம் தேங்குவதை குறைத்து, வீக்கத்தை குறைக்கலாம். பாக்கெட் உணவுகள் மற்றும் கொழுப்பு உணவுகளை தவிர்க்கவும்.

கால் மசாஜ்: கால் வீக்கத்திற்கு நிவாரணம் தர மசாஜ் உதவும். தேங்கிய திரவத்தை அகலச் செய்து வீக்கத்தை குறைக்கும்.

பொட்டாசியம்: உயர் ரத்த அழுத்தம் மற்றும் திரவம் தேங்க பொட்டாசியம் குறைபாடு காரணமாக இருக்கலாம். சக்கரைவள்ளிக்கிழங்கு, வாழைப்பழம், கோழிக்கறி ஆகிய உணவுகளில் பொட்டாசியம் அதிகம் உள்ளது.

ADMIN

Recent Posts

Csc Digital Seva Portal – ல் Ekyc செய்வது எப்படி?

#csc #esevai #cscupdate Csc Digital Seva Portal - ல் Ekyc செய்வது எப்படி? Csc Digital Seva…

6 months ago

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் Research Associate வேலை – சம்பளம்: ரூ.28,000/- || நேர்காணல் மட்டுமே!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Research Associate…

8 months ago

SSLC, டிகிரி முடித்தவர்களுக்கு ரயில்வேயில் 4,660 வேலைவாய்ப்புகள்!

ரயில்வே பாதுகாப்பு படையில் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 452 சப் இன்ஸ்பெக்டர்…

8 months ago

விஜய் கைக்கு என்ன ஆச்சு! தளபதியால் அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் பிஸியாக…

8 months ago

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம்.. மாப்பிள்ளை இவர் தான்..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை கீர்த்தி சுரெஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக…

8 months ago