நவீன யுகத்தில் நாம் மறந்துபோன நம் ஆரோகிய உணவு பழைய சோறு பச்சை மிளகாய் பாடலில் மட்டுமே தற்பொழுது கேட்க கூடியதாக இருக்கின்றது.

இன்று உலகமே நவீனமயமானதால் பழைய சோறு என்றால் என்ன என்று கேட்கும் அளவிற்கு ஆகிவிட்டது. நம் முன்னோர்கள் இந்த உணவுகளை உண்டுதான் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள்.

நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் இல்லாமல் அவர்கள் நல் ஆரோக்கியமாக நீண்டகாலம் வாந்த்தார்கள்.

நாம் மறந்துபோன இந்த பழைய சோற்றினை நாம் உண்பதால என்ன நன்மைகள் நம் உடலுக்கு கிடைக்கும் என்பதை நாம் பார்க்கலாம்.

உடலுக்கு நன்மை தரும் பாகாடீரியாக்கள் அபரிதமான அளவில் இதில் இருக்கின்றன. காலையில் இதை சாப்பிடுவதால், வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும்.

இந்த உணவு, நார்ச்சத்து தன்மையையும் கொண்டிருப்பதால், மலச்சிக்கலை நீக்கும். உடல் சோர்வை நீக்கும் தன்மை கொண்டது.

உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு அதை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கும் தன்மை கொண்டது. எல்லாவிதமான வயிற்றுப் புண்களுக்கும் பழைய சோறு வரப்பிரசாதம்.

புதிய நோய்த்தொற்றுகள் எதுவும் ஏற்படாமல் தடுக்கும்.

வனப்பைத் தரும்; இளமைத் தோற்றத்தைத் தக்க வைக்க உதவும்

By ADMIN