தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் மற்றும் குமரிக்கடல் பகுதியின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுளது. குறிப்பாக தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 29-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் வரையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக சின்கோனா (கோயம்புத்தூர்) 3 செண்டி மீட்டர் மழையும், அரிமளம் (புதுக்கோட்டை), சின்னக்கல்லாறு (கோவை), சிவகாசி (விருதுநகர்), வால்பாறை (கோவை) தலா 2 செண்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
#csc #esevai #cscupdate Csc Digital Seva Portal - ல் Ekyc செய்வது எப்படி? Csc Digital Seva…
பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Research Associate…
ரயில்வே பாதுகாப்பு படையில் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 452 சப் இன்ஸ்பெக்டர்…
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் பிஸியாக…
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை கீர்த்தி சுரெஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக…