கோடை காலத்தில் பொதுவாகவே நமது சருமம் பொலிவிழந்து காணப்படும்.அதை சரிசெய்வதற்காக அடிக்கடி பார்லருக்கு போக முடியாது. அப்படி போக நேரம் இருந்தாலும் கூடுதல் செலவு பிடிக்கும்.  இழந்த பொலிவை மீண்டும் பெற சிம்பிளாக நம் வீட்டில் இருக்கும் பொருள்களை வைத்தே சரி பண்ண சில ஃபேஸ் பேக் அயிட்டங்களை செய்து பயன் படுத்தலாம்.
         *  கடலை மாவு மற்றும் தயிர்
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு மற்றும் தயிரை எடுத்து பேஸ்ட் பதத்திற்கு நன்றாக கலக்கி முகத்தில் பூசி கொள்ளவும். 15 நிமிடம் முகத்தில் உலரவிட்டு பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவேண்டும்.
          * வடித்த சாதம் – 1 ஸ்பூன் , முட்டை வெள்ளை கரு – 1 ஸ்பூன் சேர்ந்து கலந்து மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
       பிறகு அதனை முகத்தில் அப்ளை செய்து நன்கு காய்ந்த பிறகு முகத்தை கழுவவும்.
பயன்கள்:
          * இந்த பேஸ் பேக் போடுவதால் முகத்தில் உள்ள பள்ளங்கள் மற்றும் குழிகள் நீக்குகிறது. open pores பிரச்சனையை சரிசெய்கிறது. வயதான முகத்தோற்றதை சரிசெய்து முகத்தை இளமையாக வைத்து கொள்கிறது. இந்த பேஷ் பேக் முகத்தில் போட்டவுடன் முகம் நல்ல கலராக மற்றும் பளிச்சென்று இருக்கும். 60 வயதிலும் 16 போல் முகம் பொலிவுடனும் இளமையுடனும் இருக்கும்.
  டிப்ஸ்:
         தேங்காய் ஓட்டை தீயில் போட்டு நன்கு கரியானதும் பொடி செய்துக்கொள்ளுங்கள். இதனை பல்பொடியாக பயன்படுத்தினால் பல்லின் கரைகள் நீங்கி பளிச்சென்று வெள்ளையாக மாறி விடும்.
        தலைமுடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளர வேண்டுமா?
தேங்காய் எண்ணெயை சிறிதளவு ஒரு சிறிய பாத்திரத்தில் ஊற்றி அதனை மிதமாக சூடு செய்து அத்துடன் இந்த தேங்காய் மூடி பொடியை கலந்து வாரம் இருமுறை தலை முடியின் வேர் கால்களில் நன்றாக படும்படி தேய்த்து 30 நிமிடம் கழித்து தலையை கழுவி விட கூடிய விரைவில் தலைமுடி அடர்த்தியாகவும் கருமையாகவும் இருப்பதை பார்க்கலாம்.
       ரோஸ் வாட்டருடன் இந்த பொடியை நன்றாக கலந்து முகத்தில் பேஸ் பேக் செய்தால் பரு , மரு, கரும்புள்ளிகள் , முக சுருக்கம் நீங்கி பொலிவுடன் காணப்படுவார்கள்.

By sowmiya