கொரோனா நேரத்தில் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்தவர் சோனு சூட். இந்நிலையில் சோனு சூட் 18 வயது நிரம்பிய தனது மூத்த மகனுக்கு தந்தையர் தினத்தை ஒட்டி ரூ.3 கோடி மதிப்புள்ள சொகுசு கார் பரிசளித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

இதுகுறித்து நடிகர் சோனு சூட் விளக்கம் அளித்துள்ளார். சொகுசு கார் ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு சோதனை ஓட்டத்திற்கு எங்கள் வீட்டிற்கு வந்தது. ஆனால் அந்தக் காரை நான் எனது மகனுக்கு பரிசாக அளிக்கவில்லை. மேலும் தந்தையர் தினத்தில் பரிசளிப்பதாக இருந்தால் நான் ஏன் பரிசளிக்க வேண்டும். அவர்கள்தான் எனக்கு பரிசு கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்கள் இருவரும் நன்றாக வளர்ந்து விட்டார்கள். தந்தையர் தினத்தில் அவர்கள் என்னுடன் இருப்பதே சிறப்பான பரிசு எனத் தெரிவித்துள்ளார். நடிகர் சோனு சூட் அளித்துள்ள இந்த விளக்கம் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று இருக்கிறது.

By ADMIN