தமிழ்நாட்டில் பல்வேறு சமூக பிரச்சனைகளுக்காக தனி ஆளாக நின்று போராடியவர் டிராபிக் ராமசாமி.

இவர், நீதிமன்றத்தில் பல பொதுநல வழக்குகளை தொடர்ந்து, அதன் மூலம் பல்வேறு சமுதாய பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுள்ளார்.

இதனையடுத்து, கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் திடீரென டிராபிக் ராமசாமி, சிகிச்சைப் பலனின்றி இன்று மாலை உயிரிழந்தார்.

மேலும், அவருக்கு வயது 87. அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

By ADMIN