உலகநாயகன் கமலின் மகளான நடிகை ஸ்ருதிஹாசன் தான் முருகனை தினமும் வழிபடுவதாக கூறியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் நடிகையாகவும், இசையமைப்பாளராகவும், பாடகியாகவும் வலம் வருகின்றார்.

கடந்த 2009ம் ஆண்டில் ஹிந்தி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இவர் லாபம், சலார் என்ற படங்களில் தற்போது நடித்துள்ளார்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஸ்ருதிஹாசன் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் தனது கடினமான காலகட்டத்தில் தலைநிமிர்ந்து நடக்கவும் பிரகாசமான காலத்தில் தன்னடக்கத்துடனும் இருக்கவும் என் தந்தை என்னை வழிநடத்தியுள்ளார்.

யாரை வணங்குகிறீர்கள் என்பது முக்கியமல்லை. கடவுள் முருகனைத் தினமும் வழிபடுகின்றேன். இதுபோன்ற தருணங்களில் நம் நம்பிக்கையை மீண்டும் கடைபிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

By ADMIN