பலரும் குளிர்காலத்தில் சளித்தொல்லை போன்ற பிரச்சனைகளை எதிர்கொண்டு இருப்போம். ஆனால் வெயில் காலத்திலும் சளி பிடிக்கும் என்பது நிறைய பேருக்குத் தெரியாது. ஆனால் கோடைகாலத்தில் தான் நிறைய பேருக்கு தொடர்ந்து சளி பிரச்சினை இருக்கும், இதை நாம்தான் கவனிப்பதில்லை. எனவே இந்த கோடைகாலத்தில் ஏற்படும் சளி பிரச்சனையில் இருந்து எப்படி நம்மை தற்காத்துக் கொள்வது?அதற்கான வீட்டு வைத்தியங்கள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கோடைகாலத்தில் நீங்கள் இளநீரை அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம். ஒரு நாளைக்கு இரண்டு முறை இளநீரை சேர்த்துக் கொள்வதன் மூலம் உங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் இளநீரில் வைட்டமின்கள் மற்றும் புரதங்களின் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்திருப்பதால் அது வெப்பத்தால் ஏற்படும் நோய்களில் இருந்து உங்களை பாதுகாக்க உதவுகிறது. சிகிச்சைகள் பெரும்பாலும் கோடை காலத்தில் வைரஸ்களினால் ஏற்படும் சில பிரச்சினைகளை சரிசெய்ய எந்த மருந்துகளும் உதவாது. சளி மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் காலப்போக்கில் நுண்ணியிரிகள் எதிர்ப்புகளை குறைக்க முடியும். இதுபோன்ற அறிகுறிகளை நிருபிக்க கீழ்கண்ட சிகிச்சை முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
பழச்சாறு கோடைகாலத்தில் வைரஸ்களினால் ஏற்படும் சளித் தொலையை சரி செய்ய நீங்கள் பழச்சாறை தேர்வு செய்யலாம். வைட்டமின் சி நிறைந்த பழங்கள் உங்கள் உடலுக்கு சிறந்தவை. ஆரஞ்சு, அன்னாசி, தர்ப்பூசணி போன்ற பழங்களை சேர்த்துக் கொள்ளலாம். இந்த பழங்களில் உள்ள வைட்டமின் சி நோய் தொற்றுக்கு எதிராக போராடி நம்மைக் காக்கிறது.
மிளகு மற்றும் பூண்டு சளி தொல்லையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிளகு மற்றும் பூண்டு போன்றவை வீட்டு வைத்திய நிவாரணிகள் ஆக பயன்படுகிறது, நீராவி ஆவி பிடிப்பதன் மூலம் தொண்டை புண் , இருமல் மற்றும் மூக்கு ஒழுகுதல் போன்ற பிரச்சனைகளை சரிசெய்ய முடியும்.
குறிப்பு: சிறுகுழந்தைகளுக்கு இந்த வீட்டு வைத்திய முறைகளைப் பயன்படுத்த வேண்டாம். இந்த வீட்டு வைத்திய முறையில் சளி பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்தாலும் , இந்த முறைகள் ஆராய்ச்சியில் நிரூபிக்கப் படவில்லை.ஆனால் இந்த கோடைகால சளியை கண்டு நீங்கள் பயப்படத் தேவையில்லை. குளிர்காலத்தில் ஏற்படுவது போன்று இதுவும் சாதாரணமானதே ஆகும்.
இது போன்ற பிரச்சனைகளை சரி செய்ய ஒரே வழி ஆரோக்கியமான உணவை கடைப்பிடித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது ஆகும்.
குறிப்பாக இந்த கொரோனா தொற்று காலத்தில் அடிப்படை சுகாதாரத்தை பேணி காப்பது, அவசியம் கிரீன் டீ கிரீன் டீ தொற்றுநோயை எதிர்த்துப் போராட நமக்கு உதவுகிறது. இந்த தேநீரில் உள்ள ஆன்டி – ஆக்சீடன்டுகள் பாக்டீரியாவை கொள்ள நமக்கு உதவுகிறது. இந்த கிரீன் டீயுடன் சிறிது எலுமிச்சை சாறையும் சேர்த்து அருந்தலாம்.
#csc #esevai #cscupdate Csc Digital Seva Portal - ல் Ekyc செய்வது எப்படி? Csc Digital Seva…
பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Research Associate…
ரயில்வே பாதுகாப்பு படையில் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 452 சப் இன்ஸ்பெக்டர்…
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் பிஸியாக…
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை கீர்த்தி சுரெஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக…