முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாநகரம், கைதி, மாஸ்டர், போன்ற முன்னணி படங்களை இயக்கியுள்ளார். விக்ரம் என்று இந்த படத்திற்கு பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்தில் கமலஹாசன் நடிக்க உள்ளார் இந்த படத்தில் நடிக்க கூடுதல் நடிகர்-நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

 

படத்தில் ராகவா லாரன்ஸ் கமலஹாசனுக்கு வில்லனாக நடிப்பதாக கூறப்பட்டு வருகின்றது.படக்குழுவினர் லாரன்சுக்கு கதையும் கதாபாத்திரமும் பிடித்ததால் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் என்று கூறினர். லோக்கேஷ் செல்வராஜ் வில்லன் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் தருவார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று அதனை மாஸ்டர் படத்தின் மூலம் நாம் நன்றாக உணரலாம். லாரன்ஸ் ருத்ரன் படத்தில் நடித்து வருவதலும் கமலஹாசன் வரும் சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரப் பணிகளில் பிஸியாக இருப்பதாலும் தேர்தலுக்குப் பின் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.

By ADMIN