இந்தியா – பாகிஸ்தான் இடையே இருக்கும் கடற்பகுதியில் சில இடங்களில் கடல் எல்லையை அறிய முடியாததால் மீனவர்கள் எல்லை தாண்டும் நிலை ஏற்படுகிறது.

இந்தியாவைச் சேர்ந்த 31 மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள் கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் கடற்பகுதியில் மீன்படித்ததாக கூறி அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. மீனவர்களின் 5 மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பாகிஸ்தான் கடற்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஊடுருவிய படகுகளை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்ததாக பாகிஸ்தான் கடல்சார் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. படகுகள் அனைத்தும் மேற்கொண்டு சட்ட நடவடிக்கைக்காக கராச்சிக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான கடற்பகுதியில் சில இடங்களில் கடல் எல்லையை அறிய முடியாததால் மீனவர்கள் எல்லை தாண்டும் நிலை ஏற்படுகிறது. இதனால் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்படுவது தொடர்கிறது.

By ADMIN