பிரபல உணவகத்தில் இருந்து ஆன்லைன் மூலம் டெலிவரி செய்யப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாக நடிகை நிவேதா பெத்துராஜ் புகார் தெரிவித்துள்ளார்.

ஒருநாள் கூத்து, டிக் டிக் டிக், சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நிவேதா பெத்துராஜ். இவர் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விகி மூலம் பிரபல உணவகமான மூன் லைட் ரெஸ்டாரன்ட்டில் சாப்பாடு ஆர்டர் செய்துள்ளார். ஆனால் டெலிவரி செய்யப்பட்ட உணவில் கரப்பான்பூச்சி இருந்ததாக புகார் கூறி புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.

கரப்பான் பூச்சியுடன் உணவு டெலிவரி செய்யப்படுவது இது முதல்முறையல்ல என்றும், சம்பந்தப்பட்ட உணவகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் மூன் லைட் ரெஸ்டாரண்ட்டிற்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

By ADMIN