மீந்து விட்ட சப்பாத்திக்களை மூடி போடாமல் ஒரு தட்டில் வைத்து, ப்ரிட்ஜில் வைத்து விடுங்கள். அடுத்த நாள் எடுக்கும் போது மொரமொரப்பாகி விடும். அவற்றை துண்டுகளாக நொறுக்கி வைத்து கொள்ளுங்கள். கடாயில் எண்ணெய் ஊற்றி தாளித்து, துண்டு சப்பாத்திகள் கொஞ்சம் கார்ன் ப்ளேக்ஸ் மாவு ,தேவையான அளவு உப்பு , காரம் சேர்த்து ஸ்னாக்ஸ்சாக சாப்பிடலாம். விரும்பினால் இதோடு வெங்காயமும் சேர்த்து வதக்கலாம்.
குலாப் ஜாமுன் செய்த ஜீரா மீதமாகிவிட்டால் பிரிட்ஜில் வைத்து விடுங்கள். அவ்வபோது குழப்பிய தயிரில் கொஞ்சம் ஜீராவை கலக்கி, ருசியான லஸ்ஸியாக பருகலாம் .
சமைத்த சாதம் மீந்துவிட்டதா?அதில் உப்பு போட்டு,ஒரு ஸ்பூன் தயிர் ,ஒரு டம்ளர் பால் ஊற்றிப் பிசைந்து ‘ஹாட் பேக்கில் ‘எடுத்து வைத்துவிடுங்கள்.அடுத்த நாள் பிரெஷ்ஷான தயிர் சாதம் ரெடியாக இருக்கும்.
டிப்ஸ்:
தக்காளியை சாலட் செய்ய நறுக்கும்போது உள்ளேயிருந்து சாறு வெளியே தெறித்து வழியும். இதைத் தவிர்க்க தக்காளியின் அடிபாகத்தில் ப்ளஸ் குறி போல கீறிவிட்டு பின்னர் வட்டமாக நறுக்கினால்,சாறு வீணாக்காமல் எளிதாக நறுக்கிவிடலாம்.
தோசை வார்க்கும் முன்பு, கல்லில் கொஞ்சம் பெருங்காயத்தைப் போட்டு ,அதன் மீது எண்ணெய் ஊற்றி கல் முழுவதும் தேய்த்து விடுங்கள். பிறகு தோசை வார்த்துப் பாருங்கள் சூப்பராக எடுக்க வருவதுடன் ,தோசையும் மணமணக்கும் !
#csc #esevai #cscupdate Csc Digital Seva Portal - ல் Ekyc செய்வது எப்படி? Csc Digital Seva…
பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Research Associate…
ரயில்வே பாதுகாப்பு படையில் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 452 சப் இன்ஸ்பெக்டர்…
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் பிஸியாக…
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை கீர்த்தி சுரெஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக…