சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்கவுள்ள தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மற்று முதல் முறையாக தேர்தலில் காலம் கண்டு, பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து நடிகர் சூரி நேரில் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தியுள்ளார்.

ஆட்சி அமைக்க 118 இடங்களே போதும் என்ற நிலையில், திமுக மட்டுமே தனித்து 126 தொகுதிகளில் வெற்றி பெற்றது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 4 மதிமுக, 2 மனிதநேய மக்கள் கட்சி, 1 தமிழக வாழ்வுரிமை கட்சி, 1 கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியோரும் திமுக உறுப்பினர்களாகவே சட்டப்பேரவையில் கருதப்படுவார்கள்.

எனவே சட்டப்பேரவையில் திமுகவின் பலம் 134 ஆக இருக்கும். இதன்மூலம் திமுக தமிழகத்தில் அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.

மேலும் 25 ஆண்டுகள் கழித்து திமுக தனி மெஜாரிட்டியுடன் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறது. கடந்த 1996-ம் ஆண்டு தேர்தலில் திமுக மட்டும் 173 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

ஆனால், 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றபோதும், திமுக மட்டும் தனியாக அறுதி பெரும்பான்மை பெறவில்லை. அப்போது 96 தொகுதிகளில் மட்டுமே திமுக வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சியின் முழு ஆதரவுடன்தான் 5 ஆண்டுகால ஆட்சியைத் திமுக நிறைவு செய்தது.

சுமார் 10 ஆண்டுகளுக்கு பின், தனி மெஜாரிட்டியுடன் ஆச்சி அமைத்து, தமிழக முதல்வராக வெற்றி மகுடம் சூட உள்ள, திமுக தலைவருக்கு அனைத்து மாநில அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலர் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

ஸ்டாலினும், தனக்கு ட்விட்டர் மற்றும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருபவர்களுக்கு நேரம் ஒதுக்கி தன்னுடைய நன்றிகளை தெரிவித்து வருகிறார்.

அந்த வகையில் பிரபல காமெடி நடிகர் சூரி, திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் முதல் முறையாக சட்டமன்ற தேர்தலில் களம் கண்டு வெற்றி பெற்றுள்ள அவரது மகன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்தியுள்ளார். இதுகுறித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

By ADMIN