தனுஷுடன் இருக்கும் பேரன்களுக்கு ஐஸ்வர்யாவின் தாய் லதா அட்வைஸ் செய்த நிலையில், பாட்டி கூறியதை போர் அடிக்காதீங்க என்று கூறி எஸ்கேப் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகன்களுடன் இல்லாத ஐஸ்வர்யா:
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிவிற்கு பிறகு அவர்கள் மகன்களான யாத்ரா மட்டும் லிங்கா இருவரும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களை நினைத்து பார்க்காமல் இருவரும் பிரிந்துவிட்டார்களே என்று எண்ணி யாத்ரா மற்றும் லிங்கா வருதத்தில் இருப்பதாக தகவல்கள் வந்தன.
இதெல்லாம் ஒரு புறமிருக்க தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் செம பிஸியாக தன் வேலைகளை பார்த்துவருகின்றனர். சொல்லப்போனால் தற்போது தனுஷ் அளவிற்கு ஐஸ்வர்யாவும் பிஸியாக உள்ளார். சமீபத்தில் அவர் இயக்கிய ஆல்பம் பாடல் வெளியான நிலையில் அதைத்தொடர்ந்து பாலிவுட் படங்களையும் இயக்கவுள்ளார்.
மகன்களுடன் தனுஷ்:
இதனால் அப்பா அம்மா பாசத்திற்காக ஏங்கிவரும் பிள்ளைகளின் மனதை புரிந்துகொண்ட தனுஷ் சிறிதுகாலம் இருவரையும் தன்னுடனே அழைத்து சென்றுள்ளார். சமீபத்தில் கூட இளையராஜா இசைநிகழ்ச்சியில் தனுஷ் அவரின் பிள்ளைகளுடன் வந்திருந்தார்.
மேலும் யாத்ரா மற்றும் லிங்கா இருவரும் சிறுவயதிலிருந்தே தனுஷுடனா நெருக்கமாக இருப்பார்களாம். இருப்பினும் தற்போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பிரிந்துள்ளதால் அவர்கள் பிள்ளைகள் தனுஷுடன் நெருக்கம் காட்டுவது லதாவிற்கு பிடிக்கவில்லை என தகவல் வந்துள்ளது.
மகள் பேரன்களுக்கு லதாவின் அட்வைஸ்:
எனவே தனது மகள் ஐஸ்வர்யாவை கூப்பிட்டு அறிவுரை கூறியுள்ளார் லதா. சிறுது காலம் உன் வேலைகளை ஒதுக்கிவிட்டு பிள்ளைகளுடன் நேரம் செலவிடுமாறு லதா அறிவுரை கூற அதன்படி ஐஸ்வர்யா தன் பிள்ளைகளுடன் நேரம் செலவிட்டார். இருப்பினும் யாத்ரா மற்றும் லிங்கா இருவரும் தனுஷிடமே நெருக்கமாக உள்ளார்கள்.
இதனால் லதா தன் பேரன்களுடன் ஐஸ்வர்யாவின் அருமை பெருமைகளை கூறி உங்கள் தாய்தான் இனி எல்லாம் என பேசியிருக்கிறார். இதற்கு யாத்ரா மற்றும் லிங்கா இருவரும் போர் அடிக்காதிங்க பாட்டி என கூறி சென்றுவிட்டார்களாம். இதனால் லதா கடும் அப்சட்டில் இருப்பதாக தகவல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
#csc #esevai #cscupdate Csc Digital Seva Portal - ல் Ekyc செய்வது எப்படி? Csc Digital Seva…
பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Research Associate…
ரயில்வே பாதுகாப்பு படையில் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 452 சப் இன்ஸ்பெக்டர்…
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் பிஸியாக…
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை கீர்த்தி சுரெஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக…