குர்மசனா (Kurmasana) அல்லது ஆமை போஸ் என்று அழைக்கப்படும் இந்த ஆசனம் ஆமை என்று பொருள்படும் ‘குர்மா’ மற்றும் போஸ் என்று பொருள்படும் ‘ஆசனம்’ என்ற சமஸ்கிருத வார்த்தைகளிலிருந்து குர்மசனா என்ற பெயர் வந்தது. இந்த ஆசனத்தை பயிற்சி செய்வதன் மூலம் பெண்களுக்கு கர்ப்பப்பையில் ஏற்படும் கோளாறுகள் , அதிக ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்றவை நீங்கும். சரி இந்த ஆசனத்தை எப்படி செய்வது மற்றும் இதனால் கிடைக்கும் நன்மைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

பயன்கள் :
இந்த ஆசனம் செய்வதால் முதுகுத் தண்டு, கழுத்தெலும்பு வலி குணமாகும், மன அமைதி கிடைக்கும், ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் அதிகரிக்கும். பெண்களுக்கு கர்ப்பப்பையில் இருக்கும் பிரச்சனைகள் குறைந்து குழந்தை பாக்கியம் கிடைக்கும். பெண்கள் இளம் வயதிலேயே இந்த பயிற்சி செய்து வந்தால் கர்ப்பப்பையில் உள்ள கோளாறுகள், வெள்ளைப்படுதல், ரத்தப் போக்கு போன்ற பிரச்னைகள் வராது.

மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு சரியான நேரத்தில் பிரசவ வலி ஏற்பட்டு சுகபிரசவம் உண்டாகும். மேலும் குழந்தை பிறந்த பின் ஏற்படும் முதுகு வலி ஏற்படாது. அதுமட்டுமல்லாமல் சிறுநீர்ப்பையில் கற்கள், பித்தப்பையில் கற்கள் ஏற்படாது. ஒருவேளை கற்கள் இருந்தாலும் இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்தால் கற்கள் கரைந்து விடும். குழந்தை பிறந்த பின்பும் இந்த ஆசனத்தை மூன்று மாதம் கழித்து பெண்கள் பயிற்சி செய்யலாம்.

செய்முறை:
முதலாவது யோகா விரிப்பின் மீது அமர்ந்த நிலையில் முழங்காலை மடித்து இருகால்களின் பாதங்களை ஒன்றுக்கொன்று எதிராக சுமார் பத்து அங்குல இடைவெளி இருக்கும்படி கொண்டு வரவும். அந்த இடைவெளியில் நெற்றியில் தரையில் பதித்தபடி இரு கைகளையும் முதுகின் பின்னாக பிடிக்க வேண்டும்.
அப்படி பதினைந்து வினாடிகள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும். குனியும் போது முதுகுத் தண்டின் கீழ் பகுதி, நிமிரும்போது புருவ மத்தியிலும் நினைவை செலுத்தவும். மூன்று முறை இந்த ஆசனத்தை சிறிது இடைவெளி விட்டு செய்யவும்.

By ADMIN