நடிகர் சிவகுமாரின் மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தி.இவர்கள் இருவருமே தற்போதைய தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களாக வலம்வருகின்றனர் . நடிகர் கார்த்தி பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் .தனது முதல் படத்திலேயே பிரபலம் அடைந்தார்.பின்பு பல திரைப்படங்களில் நடித்து முன்னனி நடிகரானார். தற்போது கார்த்தி நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கிய சுல்தான் திரைப்படம் சமீபத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளிவந்தது.
இந்நிலையில் நடிகர் கார்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ”நான் சிறுவயதில் என் அண்ணன் சூர்யாவை வெறுப்பேத்துவதற்காக ,அவர் என்ன உடை அணிகிறாரோ அதே மாதிரியான உடையை நான் அணிந்து கொள்வேன். ஆனால் அவருக்கு அது பிடிக்காது, அந்த வயதில் எனக்கு அப்படி செய்து அவரை வெறுப்பேத்துவது மிகவும் பிடிக்கும்” என்று பதிவிட்டுள்ளார். மேலும் இருவரும் ஒரே மாதிரியான உடை அணிந்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.