கொரோனா வைரஸ் ஆனது ஐபிஎல் போட்டியாளர்களுக்கும் பரவியதால், திடீரென ஐபிஎல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக ஐபிஎல் நிறுவனம் கூறியது.

இதனால், ஏமாற்றமடைந்த ரசிகர்கள் 2021 ஐபிஎல் தொடர் ஒருவேளை கைவிடப்பட்டால் இந்த தொடரின் வெற்றியாளர் யார்? என கேள்வியை எழுப்பி வந்தனர்.

ஆனால், தற்போது உள்ள புள்ளி விவரங்களின் அடிப்படியில் டெல்லி அணி 8ல் 6 போட்டிகளில் வென்று டேபிள் டாப்பராக உள்ளது.

சிஎஸ்கே அணி 7ல் 5 போட்டியில் வென்று இரண்டாம் இடத்தில் உள்ளது. +1.263 ரன் ரேட் கொண்டு டெல்லியை விட சென்னைதான் ரன் ரேட் அடிப்படையில் முன்னிலையில் உள்ளது.

மேலும், டெல்லி அணியின் ரன் ரேட் +0.547 மட்டுமே. இதனால் தற்போது இந்த புள்ளிகளின் அடிப்படையில் வெற்றி அணி தேர்வு செய்யப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

ஆனால் இது தொடர்பாக பிசிசிஐ வட்டாரங்கள் வெளியிட்டுள்ள தகவலில், ஐபிஎல் 2021 ஒருவேளை கைவிடப்பட்டால் வின்னர் அறிவிக்கப்பட மாட்டார்கள்.

யாரும் சாம்பியன்ஸ் என்று அறிவிக்கப்பட மாட்டார்கள். மொத்தமாக தொடர் கைவிடப்படும். மேலும், யாருக்கும் பரிசுகள் கிடைக்காது. 2021 ஐபிஎல் தொடரில் வெற்றியாளர் என்று எந்த அணியும் இருக்காது என்று கூறப்படுகிறது.

மேலும், இந்த வருட சீசன் கண்டிப்பாக நடக்க வாய்ப்பு குறைவுதான் என்று கூறப்படுகிறது.

By ADMIN