ஒரு பவுண்டு தேன் சேகரிக்க தேனீக்கள் இருபது லட்சம் பூக்களிலிருந்து தேனை சேகரிக்க வேண்டும்.

சிறுபூச்சி இனத்தைச் சேர்ந்த இந்த தேனீக்கள் ஆண்டுக்கு 1 லட்சம் கி.மீ தூரம் பயணம் செய்து தன்னுடைய உணவுத் தேவைக்காக பூக்களில் இருந்து அவை தேனை எடுக்கின்றன.

ஒரு பவுண்டு தேன் தயாரிக்க ஒரு தேனீ சுமார் 14 லட்சம் கிலோ மீட்டர் பறக்க வேண்டும். அதாவது உலகம் முழுவதும் மூன்று முறை சுற்றுவதற்கு சமம்.

ஒரு தேனீ தன் வாழ்நாள் முழுவதும் ஒன்றரை தேக்கரண்டி தேனை மட்டுமே சேகரிக்கும்.

ஒரு தேனீ ஒரு முறை தேன் தயாரிக்க 50 முதல் 100 பூக்கள் வரை செல்கிறது.

மே 20 உலக தேனீக்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.

ஒரு தேனீயால் சுமார் 7 கிலோமீட்டர் தூரம் வரை பறக்க முடியும். சராசரியாக மணிக்கு 24 கிலோமீட்டர் வேகத்தில் பறந்து செல்லும்.

தேனீக்களின் மூளை ஓவல் வடிவத்தில் எள் விதையின் அளவில் இருக்கும். ஆனால் இந்த சிறு மூளை அது செல்லும் இடங்களில் உள்ள எல்லா விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கும் நினைவில் வைத்து கொள்வதற்கும் ஏற்ற திறனைக் கொண்டுள்ளது.

தேனீக்கள் ஒருவித நடன அசைவு மூலம் ஒன்றுக்கொன்று தகவல்களை பரிமாறிக்கொள்கிறது.

ஒரு தேன் கூட்டில் ஒரு ராணி தேனீ மற்றும் 20,000 முதல் 60,000 வேலைக்கார தேனீக்கள் இருக்கும். வேலைக்கார தேனீக்கள் 6 வாரம் வரை தேன் சேகரிக்கும். அதன் பின் இறந்து விடுகின்றன.

ஆண் தேனீக்கள் 90 நாட்கள் வரை உயிருடன் வாழும். ராணி தேனீ 5 ஆண்டுகள் வரை வாழக்கூடியது. ராணி தேனீ மட்டுமே முட்டையிடும். ஒரு நாளைக்கு 2500 முட்டைகள் வரை இடுகிறது. வருடத்துக்கு 5 இலட்சம் முதல் 7 இலட்சம் வரை முட்டைகள் இடும். தன் மொத்த வாழ்நாளில் ஏறத்தாழ 1 மில்லியன் முட்டைகள் வரை உருவாக்கும்.

வேலைக்கார தேனீக்களை விட பெரியது, ஆண் தேனீக்கள். இவை ட்ரோன்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. எந்த வேலையும் செய்யாது. இதன் ஒரே நோக்கம் ராணி தேனீயுடன் இனவிருத்தி செய்வது மட்டுமே.

ராணித் தேனீக்களுக்கு ஒருமுறை தான் இனவிருத்தி என்பது நடக்கிறது. ஒரு முறை இனவிருத்தி நடந்தவுடன் ராணித் தேனீ வாழ்நாள் முழுவதும் முட்டைகளை போடுகிறது.

ஆண் தேனீக்களுக்கு கொடுக்கு கிடையாது. அதற்கு பதிலாக இனவிருத்தி செய்ய கூடிய உறுப்பு இருக்கும். இனச் சேர்க்கையின் போது மிக உயரத்தில் இந்த ராணி தேனீ பறக்கும். அப்படி அது பறக்கும் போது ஆண் தேனீக்களும் பறக்கும். இதில் எந்த ஆண் தேனீ மிக அதிக உயரத்தில் பறக்கிறதோ அதனுடன் ராணி தேனீ இனவிருத்தியில் ஈடுப்படும்.

ஆ‌‌ண் தே‌னீ‌க்க‌ள் ‌பிற‌க்க 24 நா‌ட்களு‌ம், வேலை‌க்கார‌த் தே‌னீ‌க்க‌ள் ‌பிற‌க்க 21 நா‌ட்களு‌ம் ஆ‌கி‌ன்றன. ஆனால் ரா‌ணி‌த் தே‌னீ மு‌ட்டை‌யி‌லிரு‌ந்து முழு வள‌ர்‌ச்‌சி அடை‌ந்து பிற‌க்க 16 நா‌ட்க‌ள் மட்டுமே ஆ‌கி‌ன்றன.

தேனில் உள்ள இயற்கையான இனிப்பு சுவை, பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் ஆகியவை உடலுக்கு எளிதில் ஜீரண சக்தியை கொடுக்கிறது. இதனால்தான் விளையாட்டு வீரர்கள் மற்றும் அத்தலெட்ஸ் இயற்கையான ஆற்றல் ஊக்கத்தை பெற தேனை பயன்படுத்துகிறார்கள்.

சுமார் 150 மில்லியன் ஆண்டுகளாக தேனீக்கள் தேனை உற்பத்தி செய்ய ஒரே வழியை தான் பயன்படுத்துகின்றன.

தேன் குறைப்பாடு வரும் போது ஆண் தேனீக்களை வேலைக்கார தேனீக்கள் விரட்டி விடுகின்றன. மீண்டும் ஆண் தேனீக்கள் தேவைப்பட்டால் ராணி தேனீ உருவாக்கி கொள்ளும்.

வேலைக்காரத் தேனீக்களில் பூக்களின் குளுகோஸைத் தேனாக மாற்றக் கூடிய தேன் பை எனும் உள்ளுறுப்பு காணப்படுகிறது. இந்த அமைப்பும் மற்ற இரண்டு வகை தேனீக்களுக்கும் இல்லை.

கூடுகட்ட பயன்படுத்தும் ஒரு வித மெழுகை உற்பத்தி செய்யும் சுரப்பி (Wax Gland) வேலைக்காரத் தேனீக்களுக்கு மட்டுமே உண்டு. மற்ற தேனீக்களுக்கு இல்லை.

ராணி தேனீயால் கூட்டில் இருக்கும் முட்டைகளை ஆண் தேனீயாகவோ வேலைக்கார தேனீயாகவோ மாற்ற முடியும்.

பூச்சி இனங்கள் உற்பத்தி செய்யும் உணவுகளில் தேனீ சேகரிக்கும் உணவு மட்டுமே மனிதன் உண்ண பயன்ப்படுகிறது.

தேன் பல ஆண்டுகள் கெட்டு போகாமல் இருக்கும். எகிப்திய கல்லறையில் 2000 ஆண்டுகளுக்கு பழமையான தேனைக் கண்டுபிடித்த ஒரு ஆராய்ச்சியாளர் இது மிக சுவையுடன் இருந்ததாக கூறியுள்ளார்.

ஒரு தேனீ அதிக தேன் இருக்கும் இடத்தை கண்டறிந்தால், அது மீண்டும் கூட்டிற்கு பறந்து வந்து ஒரு நடனத்தை செய்து அதன் நண்பர்களை தேன் இருக்கும் இடத்தில் அழைத்து செல்கிறது. இந்த நடனத்தை ‘வேகல் நடனம்’ (waggle dance)என்று அழைக்கப்படுகிறது.

உலக அழகி கிளியோபாட்ரா அதிக அளவில் தேன் பயன்படுத்தியுள்ளார். இவரின் தினசரி அழகு சம்மந்தப்பட்ட அலகரிப்பில் தேன் ஒரு பகுதியாக இருந்துள்ளது. ஈரப்பதத்தை ஈர்க்கவும், அதை தக்கவைத்து கொள்ளும் சக்தியையும் தேன் கொண்டுள்ளதால் அழகு சம்மந்தப்பட்ட விஷயங்களில் நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஒரு தேன் கூட்டில் சராசரியாக 80,000 தேனீக்கள் இருக்கும். அதில் ஒரே ஒரு ராணித் தேனீ, 250-க்கும் அதிகமான ஆண் தேனீக்கள் இருக்கும்.

தேனீக்களுக்கு 6 கால்கள் உள்ளன. தன்னுடைய இறக்கைகளை ஒரு நிமிடத்துக்கு 11,400 முறை வேகமாக அடிக்கும். அதாவது ஒரு வினாடிக்கு 190 முறை அடிக்கும். இவ்வளவு வேகத்தில் சிறகை அசைப்பதனால் ஏற்படும் சப்தம்தான் ஈக்களின் சலசலப்பு என அழைக்கப்படுகிறது.

ஒரு மணி நேரத்தில் 25 கி.மீ வேகத்தில் பறக்கும் தன்மை கொண்டது.

மேற்கத்திய நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் மூன்றில் ஒரு பங்கு தேனீக்கள் அழிந்து விட்டன. தற்போது உலகம் முழுவதும் அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் தேனீயும் சேர்ந்து விட்டது.

தேன் ஒரு மருந்தாக கருதப்படுகிறது. தொண்டை புண், செரிமான கோளாறுகள் முதல் தோல் பிரச்சினைகள் மற்றும் காய்ச்சல் என அனைத்திற்கும் பயன்படுகிறது.

தேன் ஆண்டிசெப்டிக் பண்புகளைக் கொண்டுள்ளது. இதை தீக்காயங்கள் மற்றும் வெட்டுக்காயங்களுக்கு முதலுதவி சிகிச்சையாக பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தேன் நம்பமுடியாத அளவிற்கு ஆரோக்கியமானது.

By ADMIN