ஆலம்பழத்தை உலர்த்தி பொடி செய்து , இரண்டு சிட்டிகை ஆலம்பழப் பொடி , ஒரு சிட்டிகை பனங்கற்கண்டு சேர்த்து காலை நாற்பது நாட்கள் உண்டுவர பெண்மலடு நீங்கும்.
        வெல்லம் 200 கிராம் , குப்பைமேனி சாறு 150 மிலி , பெருங்காயம் பொரித்தது 3 கிராம் மூன்றையும் ஒன்றாகக் கலந்து புது மன்சட்டியில் ஊற்றி, வெள்ளைத்துணியால் மூடி இளம் வெயிலில் வைத்து மாத விலக்கு காலத்தில் மூன்று நாட்கள் சாப்பிட்டுவரவேண்டும். இப்படி மூன்று முறை செய்தால் கருப்பை மலடு நீங்கும்.
       பருத்திக்கொட்டை 50 கிராம் எடுத்து அரைத்து பால் எடுத்து நாட்டுக்கோழி முட்டை வெள்ளைக்கருவில் கலந்து சாப்பிட கருப்பை நீர்க்கட்டிகள் உடையும். அடுத்த மாதம் செப்பு நெருஞ்சி வேரை பசும்பால் விட்டு அரைத்து சாப்பிட கரு தங்கும்.
      வேப்பிலைச்சாறு 150 மிலி, ஆடாதோடை சாறு 100 மிலி, தேங்காய் எண்ணெய் 100 மி லி, நல்லெண்ணெய் 100 மிலி சேர்த்து பக்குவமாய் காய்த்து வடித்துக் கொள்ளவும். இதை 12 நாட்கள் உள்ளுக்கு சாப்பிட பெண்ணுக்கு கர்ப்பம் தரிக்கும்.
      விலக்கான மூன்று நாட்களும் இரவு பட்டினி இருந்து , காலையில் தாமரைப்பூவை பாலில் அரைத்து குடித்துவர குழந்தை தங்கும்.

By sowmiya