உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், சாதாரண உணவுகளை சாப்பிடுவதற்கு பதிலாக பழ வகைகள் மற்றும் காய்கறிகள் கொண்டு தயாரிக்கப்பட்ட ஜூஸ் வகைகளை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். ஏனெனில், அவற்றில் குறைந்த அளவில் கலோரிகள் உள்ளன. அதுமட்டுமல்லாது, நார்ச்சத்து, ஆன்டி ஆக்சிடண்ட்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் உள்ளன.
பழ ஜூஸை குடிப்பதை விட காய்கறி ஜூஸை நாம் குடித்துவந்தால் நம் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைப்பதோடு உடல் எடையையும் கட்டுப்படுத்தும். சரி, அப்படி எந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை பயன்படுத்தினால் எடை குறையும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
ஸ்டிராபெர்ரி மற்றும் வெள்ளரிக்காய்
ஸ்டிராபெர்ரி பழங்களில் அதிகளவில் பாலிபீனால் மற்றும் ஆன்டி ஆக்சிடண்ட்கள் உள்ளன. இவை புற்றுநோய் மற்றும் இதய நோய்களை கட்டுப்படுத்த உதவுகின்றன. மேலும் பற்கள் பராமரிப்பிற்கும் உதவுவதாக ஆய்வில் கண்றியப்பட்டுள்ளது.
புளுபெர்ரி மற்றும் முட்டைக்கோஸ்
சிவப்பு முட்டைகோஸ் மற்றும் புளு பெர்ரி ஜூஸில், அந்தோசயனின்கள், ஆன்டி ஆக்சிடண்ட்கள் அதிகளவில் உள்ளன. மேலும் இவை நினைவுத்திறனை மேம்படுத்த உதவுகிறது.
கீரை மற்றும் ஆப்பிள் ஜூஸ்
கீரைகள் மற்றும் ஆப்பிள் ஜூஸில் வைட்டமின் கே அதிகளவில் உள்ளது. இது எலும்புகளை வலுவாக்க உதவுகிறது. கீரை மற்றும் ஆப்பிள் இரண்டுமே குறைந்த அளவிலான கலோரிகளையும் அதிக ஊட்டச்சத்துக்களையும் கொண்டிருக்கின்றன.
இஞ்சி மற்றும் பீட்ரூட் ஜூஸ்
உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் பயிற்சி செய்வதற்கு முன் பீட்ரூட் ஜூஸை குடித்தால் உடலில் ரத்த ஓட்டம் மேலும் அதிகரிப்பதோடு தசைகள் உள்ளிட்டவைகளுக்கு ஆக்சிஜன் அதிகமாக சென்று ஸ்டாமினை வலுவாக்க உதவுகிறது.
கீரைச்சாறு
இந்த ஜூஸில் உள்ள செர்லி மற்றும் பார்ஸ்லி கலவை, உயிருக்கு தீங்கு விளைவிக்கும் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தவல்ல அபிஜெனினை, நம் உடலுக்கு தருவதாக அமெரிக்காவின் ஒஹியோ பல்கலைகழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆகவே இந்த ஜூஸ் எடையை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் உடலுக்கு ஆரோக்கியத்தையும் தருகிறது.
கேரட் மற்றும் ஆரஞ்ச் ஜூஸ்
வைட்டமின் சி அதிகம் உள்ள பழங்களின் ஜூஸை அதிகம் குடித்து வருவதால், அது நமது ரத்தத்தில் கொழுப்பின் அளவை கட்டுப்படுத்துவதோடு, ரத்த குழாய்களில் டிரைகிளிசரைடுகள் படிதலை குறைக்கிறது.
தக்காளி ஜூஸ்
தக்காளி ஜூஸ் அடிக்கடி குடித்து வந்தால் உடலுக்கு தேவையான ஆன்டி-ஆக்சிடண்ட்டுகள் கிடைக்கும். ஆகவே இந்த ஜூஸ் அடிக்கடி குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
#csc #esevai #cscupdate Csc Digital Seva Portal - ல் Ekyc செய்வது எப்படி? Csc Digital Seva…
பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Research Associate…
ரயில்வே பாதுகாப்பு படையில் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 452 சப் இன்ஸ்பெக்டர்…
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் பிஸியாக…
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை கீர்த்தி சுரெஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக…