HEALTH TIPS & LIFE STYLES

வெறும் வயிற்றில் வேப்பிலை சாப்பிட்டு பாருங்க.. இந்த நோய் எல்லாம் கிட்ட வராதாம்

வேப்பிலை என்பது இன்றும் ஆயுர்வேதத்திலும், சித்த மருத்துவத்திலும் தவிர்க்க முடியாத மருந்தாக இருந்து வருகிறது. வேப்பமரத்தின் குச்சி, பட்டை, இலை, பூ, பழம், கொட்டை என அனைத்தும் கண்ணுக்கு தெரியாத நுண் கிருமிகளை அழிக்கும் தன்மை உண்டு. வேப்பிலை, உள் மருந்தாகவும், வெளி மருந்தாகவும் பயன் படுத்தப்பட்டு வருகிறது. அதாவது, வேப்பிலை சாறு, விழுது, கஷாயம், பொடி என நோயின் தன்மைக்கு ஏற்ப பயன்படுத்தலாம். வேப்பிலையில் நிம்பின், நிம்பினென், நிமான்டியல் மற்றும் இதர பொருட்களான ஆன்டி-பாக்டீரியல், பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் போன்றவை அடங்கியுள்ளன.

இது பல நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கின்றது. அந்தவகையில் இதனை வெறும் வயிற்றில் காலையில் சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை பாரப்போம்.

  • சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைக்க 2 டம்ளர் நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் 7 வேப்பிலைகளைப் போட்டு பாதியாக குறையும் வரை கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி குளிர வைத்து, காலை, மதியம் மற்றும் மாலையில் குடிப்பதன் மூலமும் நோயைக் கட்டுப்படுத்தலாம்.

 

  • குழந்தைகள் அதிகம் அவஸ்தைப்படும் குடல் புழுக்களை அழித்து பிரச்சனையில் இருந்து விடுவிக்கும். அதற்கு குழந்தைகளுக்கு காலையில் வெறும் வயிற்றில் சிறிது வேப்பிலை கொழுந்தை சாப்பிட கொடுக்கலாம் அல்லது வேப்பிலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, அந்நீரைக் குடிக்க கொடுக்கலாம்.

 

  • வயிற்றுப்போக்கால் அவஸ்தைப்படுபவர்கள்வேப்பிலையை அப்படியே சாப்பிடுவதை விட, அவற்றைக் கொண்டு பானம் தயாரித்துக் குடிப்பதன் மூலம் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

 

  • மலேரியாவில் இருந்து விடுபட, ஒரு பாத்திரத்தில் 3 டம்ளர் நீரை ஊற்றி, அதில் 7 வேப்பிலைகளைப் போட்டு ஒரு டம்ளர் நீராகும் வரை கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, காலையிலும், மதிய வேளையிலும் குடியுங்கள். இப்படி தினமும் குடித்து வர மலேரியாவில் இருந்து விரைவில் விடுபடலாம்.

 

  • சளியில் இருந்து விரைவில் விடுபட 7 வேப்பிலையை 3 டம்ளர் நீரில் போட்டு நன்கு சுண்ட காய்ச்ச வேண்டும். பின் அதை குளிர வைத்து வெதுவெதுவெதுப்பான நிலையில் குடிக்க வேண்டும். அதுவும் காலையில் எழுந்ததும் அல்லது இரவில் தூங்கும் முன் குடிக்க வேண்டும்.

 

  • இரத்தத்தின் அடர்த்தியை அதிகரிக்கும் நச்சுப் பொருட்கள், கிருமிகள் போன்றவற்றை அழித்து, இரத்த அடர்த்தியைக் குறைத்து மெலிதாக்கி, உடலில் சுத்தமான இரத்த ஓட்டத்தை மென்மையாக வைத்துக் கொள்ள தினமும் சிறிது வேப்பிலையை வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள் அல்லது வேப்பிலை நீரைக் குடியுங்கள்.

 

  • சிறிது வேப்பிலையை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி, குளிர்ந்த பின் காயம் உள்ள பகுதியைக் கழுவுங்கள். இதனால் வேப்பிலையில் உள்ள ஆன்டி-பாக்டிரியல் பண்புகள், காயங்களில் ஏற்படும் பாக்டீரியா தொற்றுக்களைத் தடுக்கும்.

 

  • வேப்பிலையில் கல்லீரல் நோய்கள் மற்றும் ஹெபடைடிஸ் பிரச்சனைகளை குணப்படுத்தும். எனவே உங்கள் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென நினைத்தால், தினமும் சிறிது வேப்பிலையை வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்.

 

  • கீல் வாத நோயில் இருந்து நிவாரணம் பெற அதற்கு வேப்பிலை கொழுந்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். ஒரு மாதம் முயற்சித்து தான் பாருங்களேன்.

 

  • லுகேமியா பிரச்சனைக்கு வேப்பிலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரை தினமும் 3 வேளை குடித்து வர நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். அதிலும் ஒரு மாதம் தொடர்ந்து இந்த பானத்தைக் குடித்து வந்தால், லுகேமியாவில் இருந்து நல்ல தீர்வு கிடைத்திருப்பதை காண முடியும்.

 

  • மூளைக்கு சீரான அளவில் இரத்த ஓட்டம் இல்லாத போது வரும் நிலை தான் பக்கவாதம். இதற்கு கால்சியம் உடலில் அதிகளவில் இருப்பது தான் காரணம். பக்கவாத பிரச்சனை வராமல் இருக்க வேண்டுமானால், தினமும் சிறிது வேப்பிலையை சாப்பிடுங்கள்.

 

  • உடல் பருமன் உள்ளவர்கள் வேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், அது உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கி, கரோனரி இதய நோயின் அபாயத்தைக் கணிசமாக குறைக்கும்.

 

  • நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை அதிகரிக்க ஏராளமான வழிகள் இருந்தாலும், வேப்பிலையை ஒருவர் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தாலே போதும். எவ்வித கிருமிகளும் உடலைத் தாக்காமல், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

 

 

  • வேப்பிலை போட்டு நன்கு கொதிக்க வைத்த நீரால், சருமத்தைக் கழுவ வேண்டும். இதனால் விரைவில் சரும பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். இது சரும பிரச்சனைகளான எக்ஸிமா, ஸ்கேபீஸ் போன்றவற்றில் இருந்து விடுபட உதவும்.

 

  • வேப்பிலையில் உள்ள அசாடிராக்ஸிடின் என்னும் பொருள் தான், உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் குறைத்து, புற்றுநோயைத் தடுப்பதாக சொல்லப்படுகிறது. எனவே புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க வேப்பிலையை தினமும் சிறிது சாப்பிடுங்கள்.

 

  • வேப்பிலையில் உள்ள சக்தி வாய்ந்த உட்பொருட்கள் எய்ட்ஸ் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும் திறன் கொண்டுள்ளது. அதிலும் வேப்பிலையில் உள்ள அசாடிராசிடின், வைரஸை அழிக்கும் மிகவும் சக்தி வாய்ந்த நச்சுப் பொருளாகும். ஆகவே தினமும் வேப்பிலை சாப்பிட்டால், எய்ட்ஸ் அபாயத்தைக் குறைக்கலாம்.
ADMIN

Recent Posts

Csc Digital Seva Portal – ல் Ekyc செய்வது எப்படி?

#csc #esevai #cscupdate Csc Digital Seva Portal - ல் Ekyc செய்வது எப்படி? Csc Digital Seva…

6 months ago

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் Research Associate வேலை – சம்பளம்: ரூ.28,000/- || நேர்காணல் மட்டுமே!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Research Associate…

8 months ago

SSLC, டிகிரி முடித்தவர்களுக்கு ரயில்வேயில் 4,660 வேலைவாய்ப்புகள்!

ரயில்வே பாதுகாப்பு படையில் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 452 சப் இன்ஸ்பெக்டர்…

8 months ago

விஜய் கைக்கு என்ன ஆச்சு! தளபதியால் அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் பிஸியாக…

8 months ago

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம்.. மாப்பிள்ளை இவர் தான்..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை கீர்த்தி சுரெஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக…

8 months ago