பொதுவாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் நோயின் தீவிரம் முற்றிலும் குணமாகும் வரை சில உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

ஏனெனில் அவை உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி, நோய் எதிர்ப்பு அழற்சியை பாதிக்கலாம். இதனால் உடல் விரைவில் குணமாவதை தடுக்கும். தற்போது அந்த உணவுகள் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.

காரமான உணவு தொண்டையில் எரிச்சலை உண்டாக்கும். இதனால் இறுமல் அதிகமாகலாம். சூப் குடித்தாலும் மிளகுத்தூள், பச்சை மிளகாய் அதிகம் சேர்க்காதீர்கள்.

நன்கு எண்ணெயில் வறுத்த உணவுகளை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது. இது நோய் எதிர்ப்பு சக்திக்கு முக்கிய காரணமாக இருக்கும் குடல் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும். இதனால் நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படும்.

சர்க்கரை அதிகம் சேர்க்கப்படும் கலர் கலர் குளிர் பானங்களை முற்றிலுமாக தவிருங்கள். கார்பனேடட் பானங்கள் எதையும் குடிக்காதீர்கள்.

பொட்டலங்களில் அடைத்து விற்கப்பட்டும் உணவுகள் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக சர்க்கரை மற்றும் சோடியம் அதிகம் சேர்ப்பார்கள். இவை நோய் எதிர்ப்பு சக்தியை மட்டுப்படுத்தக் கூடும். எனவே சிப்ஸ் வகைகள் அல்லது மற்ற எந்த பொட்டல உணவுகளையும் தவிருங்கள்.

சிவப்பு இறைச்சியில் நிறைவுற்ற கொழுப்பு அதிகம் இருப்பதால் அவை நோய் எதிர்ப்பு அழற்சிக்கு எதிராக செயல்படும். எனவே நிறைவுற்ற கொழுப்பு அல்லாத புரோட்டீன் வகை உணவுகளை உட்கொள்ளுங்கள். பக்கவிளைவுகள் இல்லாமல் இருக்க தானிய வகைகள், பீன்ஸ் கொட்டை வகைகளை சாப்பிடுவது நல்லது.

By ADMIN