நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவின் போது திமுக பிரமுகர் ஒருவர் கள்ள ஓட்டு போட முயன்றதாக சந்தேகம் எழுந்தது. அப்போது அங்கிருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் நிர்வாகிகள் அந்த நபரை கையும் களவுமாக பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமின் மனு தள்ளுபடி – ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு *திமுக பிரமுகரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் உத்தரவு *திமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி போராட்டம் நடத்தியதாகவும் வழக்குப்பதிவு.

கள்ள ஓட்டு போட்ட நபர் கொடுத்த புகாரின் பேரில் ஆபாசமாக பேசுதல், கட்டையால் அடித்துக், கொலை முயற்சி,உள்ளிட்ட 13 பிரிவுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்து பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் இரவோடு இரவாக காவல்துறையினர் கைது செய்து பூந்தமல்லியில் உள்ள தனி கிளை சிறையில் அடைத்தனர்.

நீதிமன்ற விவாதத்தின் போது ஜெயக்குமார் தரப்பும், அரசு தரப்பும் மாறிமாறி தங்களது வாதங்களை முன்வைத்தனர். தங்கள் தரப்பை பேசிய ஜெயக்குமார் தரப்பு வழக்கறிஞர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது போடப்பட்ட வழக்குகள் பெயிலில் வெளிவரக்கூடிய பிரிவுகள் எனவே ஜாமின் வழங்க வேண்டும் என வாதிட்டார்.

இந்திய தண்டனை சட்டப்பிரிவு 307-கொலை முயற்சி சேர்க்கப்பட்டுள்ளது. இந்த பிரிவு கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கியுள்ளார். சாவடிங்கடா என வார்த்தைகளை கூறி மிரட்டியுள்ளார். அதை கருத்தில் கொண்டு 307 போடப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டனர்.

இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, இரண்டாவது வழக்கில் ஜெயக்குமாருக்கு மார்ச் 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் பிறப்பித்து உத்தரவிட்டார்.

By ADMIN