லண்டன்: பிரிட்டன் நாட்டில் கொரோனா பாதிப்பு முழுவதுமாக கட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து, அங்கு மாஸ்க், தனிமனித இடைவெளி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, ஊரடங்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
கொரோனா முதல் அலையிலும் சரி, இரண்டாம் அலையிலும் சரி மோசமாகப் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் ஒன்று பிரிட்டன். பிரிட்டனில் முதலில் கண்டறியப்பட்ட ஆல்பா வகை கொரோனா அங்கு இரண்டாம் அலையை ஏற்படுத்தியது.
இதனால் கடந்தாண்டு கிறிஸ்துமஸ் தினத்திற்கு சில நாட்களுக்கு முன் அங்கு மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கிற்குப் பின்னரே வைரஸ் பாதிப்பு குறையத் தொடங்கியது.
பிரிட்டன்
அம்மாநில அரசு ஊரடங்கை அமல்படுத்தியதுடன் நின்றுவிடவில்லை. வேக்சின் பணிகளையும் தீவிரப்படுத்தியது. உலகிலேயே கொரோனா வேக்சின் பணிகளை முதலில் தொடங்கிய நாடுகளில் பிரிட்டன் முதன்மையானது. இதற்காக பைசர், ஆக்ஸ்போர்ட் தடுப்பூசி உள்ளிட்ட பல வேக்சின்களுக்கு அங்கு அனுமதி தரப்பட்டுள்ளன. முறையான திட்டமிடலுக்குப் பிறகு படிப்படியாக அங்கு வேக்சின் பணிகள் நடைபெறுகிறது.
ஊரடங்கு வாபஸ்
இப்படி போரிஸ் ஜான்சன் அரசு கொரோனாவைக் கட்டுப்படுத்த எடுத்த முயற்சிகள் காரணமாக வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வந்துவிட்டது. இதைத் தொடர்ந்து கொரோனா ஊரடங்கை வாபஸ் பெறுவதாகப் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். இந்த உத்தரவுகள் வரும் ஜூலை 19ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அவர் அறிவித்துள்ளார். அதேநேரம் போக்குவரத்து. கல்விக் கூடங்கள் திறப்பு பற்றி வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மாஸ்க் கட்டாயமில்லை
பிரிட்டன் நாட்டில் இனி பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயமில்லை. இன்னும் சில காலம் அரசு மாஸ்க் அணிவதை அந்நாட்டு அரசு பரிந்துரைத்தாலும் மாஸ்க் அணிவது ஒருவரின் சொந்த விருப்பம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல விடுதிகள், நைட் கிளப்கள் உள்ளிட்டவை எந்தவொரு கட்டுப்பாடுமின்றி செயல்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தனிமனித இடைவெளி
தனிமனித இடைவெளி கட்டாயம் என்ற அறிவிப்பும் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இனி ஒரே இடத்தில் எத்தனை பேர் வேண்டுமானாலும் மீட் செய்யலாம். திருமணம், இறுதிச்சடங்கு என அனைத்திற்கும் விதிக்கப்பட்ட தளர்வுகள் வாபஸ் பெறப்பட்டுள்ளது. அதேபோல அதிகளவிலான மக்கள் பங்கேற்புடன் பொது நிகழ்ச்சிகளை நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச போக்குவரத்து
சில குறிப்பிட்ட நாடுகளைத் தவிர மற்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகள், அவர்கள் முழுவதுமாக 2 டோஸ் வேக்சின் செலுத்திக் கொண்டிருந்தால் அவர்களுக்குத் தனிமைப்படுத்தும் விதிகளிலிருந்து விலக்கு அளிப்பது குறித்தும் இறுதி முடிவு சில நாட்களில் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டாயம் வீடுகளிலிருந்து வேலை செய்யும் WORK FROM HOME முறையும் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
தடுப்பூசி பணிகள்
மேலும், 40 வயதுக்குக் குறைவானவர்கள் வேக்சின் பணிகள் வேகப்படுத்தப்படும். இரண்டு டோஸ்களுக்கு இடைப்பட்ட காலம் 12 வாரங்களில் இருந்து எட்டு வாரங்களாகக் குறைக்கப்படும். அதேபோல வரும் செப்டம்பர் மாதம் வரை கொரோனா பரிசோதனைகள் இலவசமாக நடத்தப்படும். அதேநேரம் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், அவர் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியது கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
#csc #esevai #cscupdate Csc Digital Seva Portal - ல் Ekyc செய்வது எப்படி? Csc Digital Seva…
பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Research Associate…
ரயில்வே பாதுகாப்பு படையில் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 452 சப் இன்ஸ்பெக்டர்…
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் பிஸியாக…
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை கீர்த்தி சுரெஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக…