பாம்பு ஒன்று இளைஞரின் கண்ணை குறிவைத்து தாக்கிய வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. பாம்பு என்ற உடனே படையே நடுங்கும் என்று சொல்வார்கள் . அதற்கு காரணம் பாம்பின் மிக கொடிய விஷமும், அது கடித்தால் உயிரே போய்விடும் என்கிற பயம்தான் காரணம்.

ஆனால் ஒரு சில பேர் அந்த கொடிய விஷ பாம்புகளையே கையில் வைத்து சாகசம் காட்டுவதையும் நாம் பார்த்திருப்போம்.

நிக் என்ற இளைஞர் ஒருவர் மலைப்பாம்பு ஒன்றை கையில் வைத்து சாகசம் காட்டிக்கொண்டிருந்தார். அப்போது பாம்பு மிகவும் ஆக்ரோஷமாக கையில் கடிக்கிறது. அதனை பார்க்காமல் நிக் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார்.

மீண்டும் இந்த பாம்பு அவரது கண்ணை தாக்கியது. இதனால் உடனே நிக் அந்த பாம்பை தரையில் போட்டுவிட்டு, அவரது கண்ணை பார்த்தபோது அவரது கண்ணின் மேல் பகுதியிலிருந்து ரத்தம் வழிகிறது.

பின்னர் இரத்தம் வழியும் முகத்துடன் நிக் மீண்டும் அந்த பாம்பை கையில் வைத்து பேச தொடங்குகிறார். இந்த வீடியோ தற்போது தீயாய் பரவி வருகின்றது.

By ADMIN