அஜித் நடித்த பில்லா 2 உள்ளிட்ட பல படங்களில் பல வேடங்களில் நடித்து வந்தார் தீப்பெட்டி கணேசன். எனினும் பட வாய்ப்புகள் அதிகமாக கிடக்காததால், கொரோனா ஊரடங்கு நேரத்தில் அவர் மிகவும் குடும்பம் வறுமை நிலைக்கு சென்றது.

வறுமையை சமாளிக்க புரோட்டா மாஸ்டராக அவர் வேலை செய்து வந்தார்.. இந்த நிலைமையை பார்த்து திரை நட்சத்திரங்கள் லாரன்ஸ், விஷால் உள்ளிட்ட பலரும் அவருக்கு பண உதவி செய்து வந்தனர்.

நெஞ்சு வலி காரணமாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.. அவரின் மறைவுக்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.. தீப்பெட்டி கணேசன் இறப்பு திரையுலகில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

By ADMIN