விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியை இனிமேல் கமல்ஹாசன் நடத்தப்போது இல்லை, அவருக்கு பதிலாக லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு நடத்த இருப்பதாகவும் தகவல், பிக் பாஸ்’ நிகழ்ச்சி 4 சீசன்களை கடந்துள்ளது . இந்த 4 சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க நிகழ்ச்சியும் மிகவும் சுறுசுறுப்பாக போனது .

இந்நிலையில் அடுத்து பிக் பாஸ் சீசன் 5 நடைபெற உள்ளது. இதற்கிடையே தொகுப்பாளர் கமல் ஹாசன் சட்டமன்றத்திற்கான தனது முதல் தேர்தலை எதிர்கொள்ளப் போகிறார். அவர் இனி அரசியலில் தீவிரமாக களமிறங்கத் திட்டமிட்டுள்ளார். ஆகையால், பிக்பாஸ் நிகழ்ச்சியை அவர் நடத்த முடியாத சூழல் உருவாகி இருக்கிறது.
சீசன் 5 பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்த தயாரிப்பாளர்கள் சிம்புவை வைத்து நடத்த பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அதற்கு சிம்பு தரப்பிலும் ஓகே சொல்லிவிட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

By ADMIN