HEALTH TIPS & LIFE STYLES

மிளகில் இவ்வளவு இருக்கா ? இது தெரிஞ்சா இனி பொங்கலில் இருக்கும் மிளகை கூட தூக்கிபோடமாட்டீங்க !!

          தமிழ்நாட்டுச் சமையலில் மிளகு முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டு உணவு வகைகளான பொங்கல், மிளகு ரசம், மிளகு கோழி வருவல், முட்டை வருவல், உருளைக்கிழங்கு பொரியல் ஆகியவற்றில் சுவைகூட்டும் பொருளாக மிளகு அதிக அளவில் உபயோகப்படுத்தப்படுகிறது.
        தமிழகத்தின் புகழ்பெற்ற சமையல் முறையான செட்டிநாடு சமையலில் மிளகு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. சமையலில் காரச்சுவை ஊட்டுவதற்காக மிளகு பயன்படுகிறது. மிளகு உலர வைக்கப்பட்டு நறுமணப் பொருளாகவும், மருந்தாகவும், உணவின் சுவைகூட்டும் பொருளாகவும் உலகமெங்கும் பயன்படுத்தப்படுகிறது. மிளகில், அது பதப்படுத்தப்படும் முறைக்கேற்ப கரு மிளகு, வெண் மிளகு, சிவப்பு மிளகு, பச்சை மிளகு எனப் பலவகை உண்டு.
    ஒரே ஒரு மிளகு போதும்…உண்ணும் உணவு சுவையாக!
    இரண்டு மிளகெடுத்து இரண்டொரு ஆடாதொடா இலை சேர்த்தால் இருமல் சளி காணாமல் போகும்.
    மூன்று மிளகெடுத்து வெங்காயம் சேர்த்தால் கேசம்கூட முசு முசுவென்று வளரும்.
     நான்கு மிளகும் , சுக்கும் சிறிது கலந்தால் நெஞ்சுவலி சொல்லாமல் போகும்.
    ஐந்து மிளகும் சுக்கும் திப்பிலியும் இணைந்தால் கோழை ஓடியே போகும்.
    ஆறு மிளகெடுத்து பெருஞ்சீரகம் (சோம்பு) இடித்து உண்ண , மூலநோய் வந்த சுவடின்றி தானே மறையும்.
    ஏழு மிளகை பொடி செய்து நெய் கலந்து அன்னம் பிசைந்து உண்டால் நல்ல பசி எடுக்கும். புண்ணும் தொண்டைக்கட்டும் விட்டுப் போகும்.
    எட்டு மிளகோடு பெருங்காயம் சேர்த்துக் கொண்டால் வாந்தி கூட எட்டி நிற்கும்.
    ஒன்பது மிளகும் துளசியும், ஒவ்வாமையை (அலர்ஜி) துரத்தியடிக்கும்.
   ஆறேழு மிளகை வாயில் போட்டு கடித்து மென்று விட்டு , பகைவன் வீட்டிலும் பயமேயின்றி விருந்தூண்ணலாம்.
sowmiya

Recent Posts

Csc Digital Seva Portal – ல் Ekyc செய்வது எப்படி?

#csc #esevai #cscupdate Csc Digital Seva Portal - ல் Ekyc செய்வது எப்படி? Csc Digital Seva…

6 months ago

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் Research Associate வேலை – சம்பளம்: ரூ.28,000/- || நேர்காணல் மட்டுமே!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Research Associate…

8 months ago

SSLC, டிகிரி முடித்தவர்களுக்கு ரயில்வேயில் 4,660 வேலைவாய்ப்புகள்!

ரயில்வே பாதுகாப்பு படையில் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 452 சப் இன்ஸ்பெக்டர்…

8 months ago

விஜய் கைக்கு என்ன ஆச்சு! தளபதியால் அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் பிஸியாக…

8 months ago

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம்.. மாப்பிள்ளை இவர் தான்..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை கீர்த்தி சுரெஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக…

8 months ago