நாம் அனைவருக்கும் முகத்தைப் பொலிவாகவும் பளபளப்பாகவும் பார்ப்போரை கவரும் விதத்தில் வைத்திருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படி நம் முகத்தை மிருதுவாகவும்,கரும்புள்ளி, முகப்பரு,தழும்புகள் பள்ளங்கள் மற்றும் குழிகள் நீங்க வீட்டில் இருந்தே இயற்கை முறையாகவே சரி செய்ய சில வழிகள் இதோ !
1. முல்தானி மிட்டி 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்
கஸ்தூரி மஞ்சள் 1 ஸ்பூன்
ரோஸ் வாட்டர் 1 ஸ்பூன் சேர்த்து கலந்து முகத்தில் பூசி நன்கு காய்ந்த பிறகு முகத்தை கழுவவும்.
பயன்கள்:
முகத்தில் உள்ள பள்ளங்கள் மற்றும் குழிகள் நீக்கும். முகத்தை மிருதுவாக மற்றும் பளபளப்பாகவும் வைத்து கொள்ளும். முகத்தில் உள்ள கரும்புள்ளி மற்றும் முகப்பரு தழும்புகள் மறையும். முகப்பரு வராமல் தடுக்கும். முகத்தை வெண்மையாக வைத்து கொள்ளும் வெயிலினால் ஏற்படும் கருமை நீங்கி முகம் பிரகாசமாக இருக்கும். கற்றாழை ஜெல்லை தேன் சேர்த்து கலந்து முகத்தில் பூசி நன்கு காய்ந்த பிறகு முகத்தை கழுவவும். இவ்வாறு செய்வதால் முகத்தில் உள்ள அழுக்குகளை எடுத்து முகத்தை வெண்மையாக வைத்துக்கொள்ள உதவுகிறது. முகத்தில் தெரியும் கரும்புள்ளி மற்றும் முகப்பரு தழும்புகள் மறைய செய்கிறது. முகத்தில் உள்ள சுருக்கங்களை சரி செய்து முகத்தை என்றும் இளமையாக வைத்திருக்க உதவும்.
2. காபி தூள் 1 ஸ்பூன்
தேன் 1 ஸ்பூன் தயிர் 1 ஸ்பூன் சேர்த்து கலந்து முகத்தில் பூசி நன்கு காய்ந்த பிறகு முகத்தை கழுவவும்.
பயன்கள்:
முகத்தில் உள்ள பள்ளங்கள் மற்றும் குழிகள் நீக்கும். வெயிலினால் ஏற்படும் கருமை நீங்கி முகம் வெண்மையாக மற்றும் சிகப்பழகாக இருக்கும். pigmentation ஐ சரிசெய்யும் மற்றும் முகப்பரு தழும்புகள் மறைய செய்யும்.