நடிகர் அஜித்தின் 62ஆவது படத்தை விக்னேஷ்
சிவன் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக
அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித் நடித்து தற்போது
வலிமை படம் வெளியாகி ஓடிக்கொண்டு
இருக்கிறது.

இதனைத்தொடர்ந்து, மீண்டும்
ஹெச்.வினோத் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கஉள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக AK61 என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை
விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாகத் தகவல்
வெளியானது. மேலும் இப்படத்திற்கு அனிருத்
இசையமைக்கிறார்.

தற்போது இதன் தகவல் அதிகாரப்பூர்வமாக
வெளியாகியுள்ளது.

அஜித்குமார் ஜோடியாக நயன்தாரா நடிக்க
உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

By ADMIN