பிரபல திரைப்பட நடிகையும், சீரியல் நடிகையுமான பிரியா ராமனுக்கு பலரும் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் 1990 காலகட்டத்தில், வெள்ளித் திரையில் கொடி கட்ட பறந்த நடிகைகள் எல்லாம், இப்போது சீரியல் பக்கம் வந்துவிட்டனர்.
அப்படி செம்பருத்தி என்ற சீரியல் மூலம் வந்தவர் தான் நடிகை ப்ரியா ராமன், இவர் தமிழில் 1993-ஆம் ஆண்டு, இயக்குனர் நட்ராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் தயாரித்த வள்ளி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார்.
அதன் பின் சில படங்களில் நடித்த இவர், மலையாளம் பக்கம் சென்றுவிட்டார். இருப்பினும், நடிகை பிரியா ராமனும் நடிகர் ரஞ்சித்தும் நேசம் புதிது படத்தில் ஜோடியாக நடித்தனர்.
அப்போது, இருவருக்கும் இடையே காதல் ஏற்பட, கடந்த 1999-ஆம் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்கள்.
இவர்களுக்கு ஆதித்யா (14), ஆகாஷ் (10) என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
நன்றாக சென்று கொண்ட இருந்த இவர்கள் வாழ்வில் கருத்து வேறுபாடு ஏற்பட இவர்கள் இருவரும் கடந்த 2014 ஆண்டு சட்டரீதியாக விவகாரத்து பெற்றனர்.
இந்நிலையில், இவர்கள் விவாகரத்தாகி ஏழு ஆண்டுகள் ஆன நிலையில், மீண்டும் இவர்கள் ஒன்று சேர முடிவு செய்துள்ளனர்.
அதன் படி இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ப்ரியா ராமன், மற்றும் ரஞ்சித் தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இதைக் கண்ட திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் அவர்களுக்கு தொடர்ந்து வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், மீண்டும் கணவருடன் சேர்ந்த ப்ரியா ராமனை, செம்பருத்தி சீரியல் குடும்பம், மிகவும் உற்சாகத்துடன் வரவேற்றுள்ளது.
#csc #esevai #cscupdate Csc Digital Seva Portal - ல் Ekyc செய்வது எப்படி? Csc Digital Seva…
பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Research Associate…
ரயில்வே பாதுகாப்பு படையில் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 452 சப் இன்ஸ்பெக்டர்…
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் பிஸியாக…
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை கீர்த்தி சுரெஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக…