இந்திய சினிமாவில் 1996ஆம் ஆண்டு வந்த காதல் தேசம் என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகர் அப்பாஸ். அதன் பிறகு அவர் நடித்த படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைப் பெறாத நிலையில், அவர் பெரும்பாலான திரைப்படங்களில் இரண்டாவது நாயகனாகவே நடித்து வந்தார்.

நடிகர் அப்பாஸ் திருட்டுப்பயலே படத்தில் மோசமான கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
இவர் 2001ஆம் ஆண்டு எராம் அலி என்ற பேஷன் டிசைனரை திருமணம் செய்து கொண்டார்.
அவர்களுக்கு எமிரா, அய்மான் என இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சினிமாவை விட்டு விலகி வெளிநாட்டில் செட்டிலாகியிருக்கும் நடிகர் அப்பாஸின் 21 வயது மகள் எமிராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை கண்ட நெட்டிசன்கள் செம அழகா இருப்பதாக கூறிவருகின்றனர்.

By ADMIN