போன வருடம் நியூசிலாந்துக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு முழங்காலில் ஏற்பட்ட காயம் ஏற்பட்டது.
இவர் சிகிச்சைப் பெற்று வந்ததால் தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸிக்கு எதிரான போட்டிகளில் ஜடேஜா பங்கேற்கவில்லை. அவர் காயம் காரணமாக ஓய்வில் இருந்த வந்தார் , பின்னர் இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இந்திய அணிக்குத் வந்துள்ளார்
இதுகுறித்து ஜடேஜா கூறுகையில், இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இந்தியாவுக்காக விளையாடவுள்ள நான் நல்ல உடல் தகுதியுடன் இருக்கிறேன். இலங்கை தொடருக்காக மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். இதற்காக பெங்களூருவில் பந்துவீச்சு, பேட்டிங் பயிற்சி செய்து வருகிறேன் என ஜடேஜா கூறியுள்ளார்.