138 நகராட்சிகளில் 132 நகராட்சிகளை திமுக கைப்பற்றியுள்ளது. அதேபோல தமிழகத்தில் மொத்தம் 490 பேரூராட்சிகள் உள்ள நிலையில், அதில் திமுக கூட்டணி குறைந்தது 430 பேரூராட்சிகளைக் கைப்பற்றும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அதிமுக 164 வார்டுகளில் வென்றுள்ளன. அதைத் தொடர்ந்து காங்கிரஸ் 73 வார்டுகளையும் சிபிஎம் 24 வார்டுகளையும் கைப்பற்றி உள்ளது. சிபிஐ 13 வார்டுகளிலும் வென்றுள்ளன. இதர கட்சிகளைச் சேர்ந்தவர்களும் சுயேச்சையாகப் போட்டியிட்டவர்களும் மட்டுமே 125 வார்டுகளில் வென்றுள்ளனர்.

திமுக கூட்டணி மட்டுமே 2571 வார்டுகளில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. திமுக மட்டும் 2360 வார்டுகளில் வென்றுள்ள நிலையில், அதிமுகவால் வெறும் 638 வார்டுகளில் மட்டுமே வெல்ல முடிந்தது.

கடந்த 2011 மாநில எதிர்க்கட்சியாக இருந்த தேமுதிகவால் 12 வார்டுகளில் மட்டுமே வெல்ல முடிந்தது. இதர கட்சியினரும் சுயேச்சைகளும் 565 நகராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளை கைபற்றி உள்ளனர்.

பேரூராட்சிகளைப் பொருத்தவரை மொத்தம் 490 பேரூராட்சிகளில் மொத்தம் 7621 வார்டு உறுப்பினர்கள் பதவிகள் உள்ளன. அதில் திமுக கூட்டணி 4833 வார்டுகளில் வென்றுள்ளன. 4388 வார்டு உறுப்பினர் பதவி இடங்களை திமுக கைப்பற்றி உள்ள நிலையில், எதிர்க்கட்சியான அதிமுக 1206 வார்டுகளில் மட்டுமே வென்றுள்ளது.

By ADMIN