TECHNOLOGY

உடனே ஆஃப் பண்ணுங்க! உங்க ஸ்மார்ட்போன்ல இதெல்லாம் ஆன்ல இருக்கா?

இன்றைய நவீன காலக்கட்டத்தில் அனைவரும் ஒரு செல்போனுக்கு அடிமையாகவே இருக்கிறோம். எல்லா, தொழில்நுட்பமுமே இணைய வழியாகவும், ஆப்ஸ் வழியாகவும் வந்துவிட்டன. ஆனாலும் அதை சரியான முறையில் கையாள மறந்துவிடுகிறோம்.

அந்த வகையில், நமது ஸ்மார்ட்போன்கள் 100% Cyberattack proof ஆக இருக்க முடியாது என்றாலும் கூட, ஹேக்கர்களின் பார்வையில் இருந்து நமது ஆன்லைன் இருப்பைப் பாதுகாக்க தேவையான சில முன்னெச்சரிக்கைகள் பயன்படுத்த வேண்டும்.

அதிலும், மிகவும் முக்கியமான ஒன்று – நமது Google அக்கவுண்ட்களுடன் இணைக்கப்பட்ட மூன்றாம் தரப்பு ஆப்களின் (Third-party apps)-களை குறைப்பது தான்.

இதில், உங்கள் Google அக்கவுண்ட் எந்தெந்த மூன்றாம் தரப்பு பயன்பாட்டை அணுகலாம் என்பதைக் கண்காணிப்பதன் வழியாக, உங்கள் Google அக்கவுண்ட்டை ஹேக்கர்களின் கண்களிலிருந்து மறைத்து வைக்கலாம்.

பயப்பட வேண்டாம்.. ஒரு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வழியாக இதை கண்டுபிடிக்க இரண்டு வழிகள் உள்ளன. அதில், இரண்டாவது வழி மிகவும் சுலபமானது…

முதல் வழி
உங்கள் Android ஸ்மார்ட்போனின் மொபைல் டேட்டாவை சுவிட்ச் ஆன் செய்யவும் அல்லது நம்பகமான வைஃபை நெட்வொர்க்குடன் இணைக்கவும்.
அதன்பின்னர் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள செட்டிங்ஸ்-க்கு சென்று ‘கூகுள் அக்கவுண்ட்’ என்பதைத் தேடுங்கள்.
தேடல் முடிந்ததும் கூகுள் அக்கவுண்ட்டின் கீழ் சில விருப்பங்கள் காண்பிக்கப்படுவதை நீங்கள் காண்பீர்கள், அவற்றில் ஒன்று ‘Security’. அதை கிளிக் செய்யவும்.
இப்போது, நீங்கள் உங்கள் Android ஸ்மார்ட்போனில் லாக்-இன் செய்யப்பட்டு இருக்கும் கூகுள் அக்கவுண்ட்கள் காண்பிக்கப்படும்.
அவற்றில், மூன்றாம் தரப்பு பயன்பாட்டு அணுகலை நீக்க விரும்பும் Google அக்கவுண்ட்-ஐ தேர்ந்தெடுக்கவும்.
இப்போ Security-க்கு செல்லுங்கள். பின்னர் Third-party apps with account access என்பதின் கீழ் ‘Manage third-party app access என்கிற விருப்பத்தை காண்பீர்கள்.
அதை கிளிக் செய்யவும் தற்போது, உங்கள் Google அக்கவுண்ட்-ஐ அணுகக்கூடிய அனைத்து மூன்றாம் தரப்பு பயன்பாடுகளையும் நீங்கள் காண முடியும். நீங்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக சென்று Remove Access என்பதைத் தேர்ந்தெடுக்கலாம்.
நீங்கள் எதை அகற்ற விரும்புகிறீர்கள் என்பது உங்களுடைய தேர்வாகவே இருக்கும். இருப்பினும் எந்தவொரு மூன்றாம் தரப்பு பயன்பாட்டிற்கும் நீங்கள் Google அக்கவுண்ட் அணுகலை வழங்காமல் இருப்பதே நல்லது.
இரண்டாவது வழி

உங்கள் Android ஸ்மார்ட்போனை இண்டர்நெட் உடன் இணைக்கவும், பின்னர் Google suite-இன் ஒரு பகுதியாக இருக்கும் உங்கள் Google ஆப்பை திறக்கவும் இப்போது ஸ்க்ரீனில் மேல் வலது மூலையில் அமைந்துள்ள உங்கள் Google அக்கவுண்ட் icon-யை க்ளிக் செய்யவும்.
அதன் பின்னர் ‘Manage your Google account’ என்பதை கிளிக் செய்யவும் காணப்படும் துணைத் தலைப்புகளை ஸ்லைட் செய்து Security-க்கு செல்லவும். பின்னர் மேற்கண்ட அதே வழிகளை பின்பற்றவும்.

ADMIN

Recent Posts

Csc Digital Seva Portal – ல் Ekyc செய்வது எப்படி?

#csc #esevai #cscupdate Csc Digital Seva Portal - ல் Ekyc செய்வது எப்படி? Csc Digital Seva…

6 months ago

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் Research Associate வேலை – சம்பளம்: ரூ.28,000/- || நேர்காணல் மட்டுமே!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Research Associate…

8 months ago

SSLC, டிகிரி முடித்தவர்களுக்கு ரயில்வேயில் 4,660 வேலைவாய்ப்புகள்!

ரயில்வே பாதுகாப்பு படையில் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 452 சப் இன்ஸ்பெக்டர்…

8 months ago

விஜய் கைக்கு என்ன ஆச்சு! தளபதியால் அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் பிஸியாக…

8 months ago

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம்.. மாப்பிள்ளை இவர் தான்..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை கீர்த்தி சுரெஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக…

8 months ago