ரஷ்ய அதிபர் புடின் இன்று காலை உக்ரைனுக்கு எதிராக போர் தொடுக்க போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார். இது மூன்றாம் உலகப்போருக்கு வித்திடுமா.. சீனா இதில் என்ன செய்யும்.. அமெரிக்க அதிபர் பிடன் என்ன செய்வார்.

1991 டிசம்பரில் சோவியத் யூனியன் உடைந்த போது உக்ரைன் தனியாக பிரிந்தது. ஆனால் அப்போதில் இருந்து உக்ரனை எப்படியாவது தனது கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று ரஷ்யா முயன்று வருகிறது.

ஏற்கனவே 2014ல் உக்ரைனின் கிரிமியாவை கைப்பற்றிய ரஷ்யா அதை தனது நாட்டின் ஒரு பகுதியாக அறிவித்தது. கொஞ்சம் கொஞ்சமாக கிரிமியா போலவே உக்ரைனின் மற்ற பகுதிகளையும் ரஷ்யா கைப்பற்ற முயன்று வருகிறது.

இரண்டாம் உலகப்போர் முடிந்து பல வருடம் ஆகிவிட்டது.. அமெரிக்கா – ரஷ்யா இடையிலான பனிப்போர் 1989லேயே முடிந்துவிட்டது. ஆனாலும் அமெரிக்காம் ஐரோப்பா இந்த நேட்டோ படையை கலைக்காமல் அதை விரிவாக்கி வருகிறது.

இதை ரஷ்யா பொறுக்க முடியாமல்தான் தொடக்கத்தில் வார்னிங் கொடுத்தது. ஆனால் அமெரிக்கா நேட்டோ விரிவாக்கத்தை நிறுத்தவில்லை. விளைவு தற்போது ரஷ்யா உக்ரைன் உள்ளே புகுந்துள்ளது, ஆனால் இது உக்ரைனோடு முடியாது.

நேட்டோவில் இருக்கும் மற்ற சோவியத் நாடுகள், மற்ற ரஷ்யாவின் அண்டை நாடுகளை இதே போரின் மூலம் ரஷ்யா கைப்பற்றும் அபாயம் உள்ளது. அதாவது இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் நாடுகளை கைப்பற்ற துடித்தது போல இது மூன்றாம் உலகப்போரை ஏற்படுத்தும் அபாயம் உண்டாகி உள்ளது.

உக்ரைன் போர் உச்சம் அடைய இன்னும் 2-3 நாட்கள் ஆகும். அது பெரிதான பின் கண்டிப்பாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தலையிடும். பல நாட்டு எல்லை பிரச்சனைகள் தீர்க்கும் விதமாக உக்ரைன் – ரஷ்யா போர் முழு 3ம் உலகப்போராக வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது!

By ADMIN