தமிழக அரசின் 2வது அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் தற்போதைய முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவது, மூன்றாவது அலைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அரசின் கொள்கை சார்ந்து எடுக்க வேண்டிய முடிவுகள், 2021-22ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அறிவிப்புகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

By ADMIN