பா.ஜ.,வின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது. தமிழக பா.ஜ., தலைவர் எல்.முருகன் தாராதபுரம் (தனி) தொகுதியில் போட்டியிடுகிறார்.

அதிமுக கூட்டணியில் உள்ள பா.ஜ.,விற்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
இந்நிலையில், புதுடில்லியில் இன்று (மார்ச் 14) மத்திய அமைச்சரும், தமிழக தேர்தல் பொறுப்பாளருமான கிஷன்ரெட்டி பா.ஜ., தேசிய பொதுச்செயலர் அருண் சிங், ஆகியோர் கூட்டாக முதல்கட்டமாக 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டனர்.

கோவை தெற்கு – வானதி சீனிவாசன்
அரவக்குறிச்சி – அண்ணாமலை
ஆயிரம் விளக்கு – குஷ்பு
தாராபுரம் – எல்.முருகன்
காரைக்குடி – எச்.ராஜா
நாகர்கோவில் – எம்.ஆர்.காந்தி

By venkat