ஸ்ரீரங்கம் கோவிலில் சசிகலா குடும்ப உறவினர்களுடன் சாமி தரிசனம் செய்தார்.

அண்மையில் சிறையிலிருந்து விடுதலையானதும் லட்சக் கணக்கானவர்கள் திரண்டு, வரவேற்பளித்தனர். அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரசியலில் இருந்து ஒதுங்குவதாக கூறி அதிர்ச்சி அளித்தார்.

தஞ்சாவூர் அருளானந்தம் நகரில் உள்ள வீட்டிற்கு வந்தார். தொடர்ந்து நேற்றைய தினம் சசிகலாவின் நடராஜனின் தம்பி பழனிவேலு பேரக் குழந்தைகளின் காதணி விழாவில் பங்கேற்றார்.

இதை தொடர்ந்து இன்று திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

தனது காரில் புறப்பட்டு சென்றது போது, தியாகத் தலைவி, நிரந்தரப் பொதுச் செயலாளர்  வாழ்க என்று அமமுக நிர்வாகிகள் முழக்கமிட்டனர். ஆதரவாளர்கள் நிரந்தரப் பொதுச் செயலாளர் என்று முழக்கமிட்டாலும், கும்பிட்டு வணங்கியபடி கொடி ஏதும் கட்டாத காரில் சென்றார்.

அமமுக தஞ்சாவூர் தெற்கு மாவட்டச் செயலாளர், ஒரத்தநாடு வேட்பாளர் மா.சேகர் சசிகலாவைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

By venkat