தோனி உலக கிரிக்கெட் அரங்கத்தில் என்றுமே மறக்க முடியாத பெயர் தான். சர்வதேச போட்டிகளில் இருந்து தனது ஒய்வை அறிவித்திருந்தாலும், இன்றும் ஐபிஎல் போட்டிகளில் ஆடி வருகிறார்.

சி எஸ் கே என்ற டீம் இவரை நம் தமிழகத்தின் மண்ணின் மைந்தன் ஆகிவிட்டது. சென்ற சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ்சுக்கு ஏற்றதாக அமையவில்லை. கொரோனா தொற்று காரணமாக போட்டிகள் துபாய்க்கு மாறின, டீம் படு தோல்வி தழுவியது.

புதிய சீசன் வரும் ஏப்ரல் 9 துவங்குகிறது. சி எஸ் கே நிர்வாகம் பெரிய மாற்றங்களை செய்யவில்லை, இம்முறையும் தோனி தான் கேப்டன்.  பயிற்சி கேம்ப் ஆரம்பித்துவிட்டனர் சேப்பாக்கத்தில்.

இந்நிலையில் துறவி கெட் அப்பில் உள்ள தோனியின் போட்டோ இணையத்தில் வைரலாக நேற்று பகிரப்பட்டது. இதனை STAR SPORTS-ல் ட்விட்டர் பக்கம் தான் முதலில் பதிவிட்டனர்.

 

By venkat