என்னதான் பொலிவான முகத்தோற்றத்தை கொண்டிருந்தாலும், வயிறு சிறிதளவு வெளியில் தள்ளிக் கொண்டிருந்தாலே பலரை அது துன்பத்தில் ஆழ்த்தும்.

ஆனால் பலர் உடலை விட வயிற்றுப்பகுதி பெரிதாக காணப்படும் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு கஷ்டப்படுகின்றனர்.

வயிற்றின் மீது படர்ந்துள்ள கொழுப்பு கவசம் அல்லது தொங்கும் தொப்பையால் நீங்கள் அவதிப்படுபவராக இருந்தால், நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் இவை.

தினசரி உடற்பயிற்சி மற்றும் கட்டுப்பாடான உணவு முறையை பின்பற்றுவதன் மூலம் பொதுவான உடல் நலத்தின் மீது கவனம் செலுத்துவது மிக அவசியம்.

இந்த தொங்கும் வயிற்று சதையை தனியாக குறைக்க முடியாது. காரணம் இது ஒட்டுமொத்த உடல் குறைப்பு மற்றும் அறுவை சிகிச்சையல்லாத நிலைகளோடு தொடர்புடையது.

நீங்கள் உடல் எடையை குறைக்கும் போது உங்கள் கொழுப்பும் சேர்ந்து குறைகிறது.

கிரென்சிங் மற்றும் சிட்அப் முறை மூலம் அதை குறைக்கலாம் என சிலர் சொல்கிறார்கள். ஆனால் அது உங்கள் அடிவயிற்று தசைகளை வலுப்படுத்த உதவுமே தவிர தொப்பையை அகற்றுவதில்லை.

ஏனெனில் தொங்கும் தொப்பை இருக்கும் வயிற்றுப் பகுதிகளில் கொழுப்பு இரண்டு லேயர்களாக அமைந்துள்ளதால் அதை குறைப்பது கடினம்.

​வழிமுறைகள்

எனவே குறிப்பிட்ட பகுதியை குறைப்பதற்கு முயற்சி செய்வதற்கு பதிலாக, ஒட்டுமொத்த உடல் எடையையும் குறைப்பதற்கான வழிமுறைகளை மேற்கொள்ளுங்கள்.

தொடர் உடற்பயிற்சிகள் மேற்கொள்ளும்போது குறைந்த கலோரிகள் கொண்ட ஆரோக்கியமான உணவை அவசியம் உண்ணுங்கள்.

நீங்கள் அறுவை சிகிச்சை மருத்துவத்தை கூட நாடலாம்.ஆனால் அது சிறிது விலை உயர்ந்தது. பன்னஸை அகற்றும் “பானிகுலோக்டமி” என்ற வழிமுறை உள்ளது. அது அதீத கொழுப்பு மற்றும் தோல்பகுதி அகற்றுவதால் அடிவயிற்று தசைகளை இறுக்காது. நீங்கள் விரும்பினால் இது வயிற்றின் தொப்புள் பகுதியோடு அல்லது வயிற்றுப் பகுதியில் அமைக்கப்படும்.

யாருக்காவது இந்த முறையில் விருப்பமில்லை என்றால் நீங்கள் “கூல் ஸ்கல்ப்டிங்” முறையை முயற்சி செய்யலாம். இது தேவையற்ற கொழுப்பை உறைய செய்து ,அது அதிகரிப்பதைத் தடுக்கிறது. “ஆரோக்கிய உடலே, அளவில்லா மகிழ்ச்சி”

By ADMIN