8 வழிச்சாலை ரத்து உள்ளிட்ட 5 புதிய வாக்குறுதிகளை வெளியிட்ட ஸ்டாலின்…

திமுக தலைவர் ஸ்டாலின், நேற்று (மார்ச் 13) தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார்.

1. விவசாயிகளுக்கு எதிரான சேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்பட மாட்டாது.
2. காட்டுப்பள்ளி துறைமுகத்துக்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது.
3. இந்திய குடியுரிமை திருத்த சட்டம் 2019-ஐ திரும்பப் பெற மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும்.
4. இந்திய முகாம்களில் தங்கி இருக்கும் இலங்கை தமிழர்களுக்கு, இந்திய குடியுரிமை வழங்கிட வலியுறுத்தப்படும்.
5. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை 2020 நிராகரிக்கப்படும்.

போன்ற 5 புதிய வாக்குறுதிகளை திருத்தம் செய்து மு க ஸ்டாலின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

 

By venkat