கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே பெண் ஒருவர் கொரோனா தடுப்பூசி என்று கூறி தனது உறவினர்களிடம் திருடிய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராசாத்தி அத்தை மகள் சத்திய பிரியா இருவரும் லக்கூர் என்ற கிராமத்தில் வசித்து வருகின்றனர். இருவரும் விற்பனை பிரதிநிதியாக தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகின்றனர்.

 

சத்திய பிரியா ராசாத்தி வீட்டுக்கு சென்று உள்ளார் சத்திய பிரியா ராசாத்தி இடம் கொரோனா தடுப்பூசி கொண்டு வருவதாகவும் அதைத்தானே போட்டு விடுவதாகவும் கூறி உள்ளார். சத்யபிரியா ராசாத்தியின் மகள் கணவன் அனைவருக்கும் மயக்க ஊசி போட்டுள்ளார். ஊசி போட்ட சிறிது நேரத்தில் அனைவரும் மயங்கினர் பின்னர் சத்யப்ரியா ராசாத்தி  கழுத்திலிருந்த 6 சவரன் தாலி மற்றும் ராசாத்தியின் மகள் கழுத்தில் இருந்த செயின் போன்றவற்றை திருடிச் சென்றார் மொத்தம் 19 சவரன் நகைகளை சத்யபிரியா திருடியுள்ளார். ராசாத்தியின் குடும்பத்தினர் சத்திய பிரியாவின் மீது வழக்கு பதிவு செய்தனர் இதனை அடுத்து போலீசார் சத்தியப் பிரியாவை கைது செய்து நகையை பறிமுதல் செய்தனர்.

By ADMIN