இப்போது தான் நல்ல பிள்ளையாக மாறியுள்ளார் சிம்பு. அவரின் இந்த மாற்றம் தயாரிப்பாளர்களுக்கு நிம்மதியை தந்திருக்கிறதோ இல்லையோ, அவரின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.

ஈஸ்வரனை தொடர்ந்து சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படத்தை காண ஆர்வமாக இருக்கின்றனர் ரசிகர்கள். வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ரம்ஜான் வெளியீடாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் 2004 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியாகி BLACKBUSTER HIT ‘மன்மதன்’ திரைப்படத்தை ரீ ரிலீஸ் செய்வதற்கான வேலைகள் நடந்து வருகின்றன.

காதலர் தினத்தில் நாயிடம் தனக்கு எப்போது கல்யாணம் ஆகும் என புலம்பிய வீடியோ, கங்கையில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்திய போது எடுக்கப்பட்ட புகைப்படம், சமீபத்தில் ஜிம்மில் ஓர்க்அவுட் செய்து கொண்டிருக்கும் போது பயிற்சியாளரை கலாய்த்த வீடியோ என சிம்புவின் பதிவுகள் அனைத்தும் டிரெண்டிங்கில் இருக்கும்.

அந்த வரிசையில் நேற்றைய தினம் சிம்பு வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. கையில் பழைய மாடல் நோக்கியா மொபைல் போனுடன் தனது சிறு வயது போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார் சிம்பு. அத்துடன், இது எந்த வருடம் என கண்டுபிடியுங்கள் என கேள்வியும் கேட்டுள்ளார்.

 

By venkat