அதிமுக தேர்தல் அறிக்கை தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு தற்போது வெளியாகி உள்ளது. முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அதிமுக அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

மொத்தம் 164 திட்டங்கள் கொண்ட அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது.

*அம்மா இல்லம் என்ற திட்டத்தின் மூலம் அனைவருக்கும் வீடு கட்டித்தரப்படும்.
* கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டு முழுவதும் 2ஜிபி டேட்டா
* வீட்டில் ஒருவருக்கு அரசுப்பணி
* அம்மா வாஷிங் மெஷின் வழங்கும் திட்டம் நிறைவேற்றப்படும்
* விலையில்லா கேபிள் டிவி இணைப்பு
* ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும்
* இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை
* மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய நடவடிக்கை
* நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்
* பெட்ரோல், டீசல் விலை குறைக்க நடவடிக்கை
* மாதம்தோறும் மின் கணக்கீட்டு முறை பின்பற்றப்படும்
* மகப்பேறு விடுப்பு ஒரு வருடமாக அதிகரிக்கப்படும்
* கல்விக்கடன் ரத்து செய்யப்படும்
* ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆட்டோ வாங்க ரூ.25 ஆயிரம் மானியம்

 

By venkat