நோய் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்கும் கஷாயம்... நுரையீரல் வைரஸை முற்றிலும் அழிக்கும் அதிசயம்!

மூலிகை கஷாயத்தில் துளசி மற்றும் மிளகு சேர்ப்பதால் தொண்டைக்கு இதமாகவும், தொண்டையில் ஏற்பட்ட கரகரப்பு பிரச்சனையையும் சரி செய்ய உதவுகின்றது.
இரவில் உறங்கும் முன்பு குடித்து வந்தால் முக்கடைப்பு பிரச்சனை சரியாகும்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் உங்களுக்கு நோய் தொற்று ஏற்படும். இதன் காரணமாக இருமல், காய்ச்சல், மூக்கடைப்பு மற்றும் தொண்டைக்கரகரப்பு போன்ற உடல் உபாதைகள் உண்டாகும்.
இதை சரிசெய்ய இந்த மூலிகை கஷாயத்தை செய்து குடிக்கலாம், இது உடலுக்கு ஆற்றலையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் தந்து, நோய்களை குணமாக்க உதவுகிறது.
அக்காலத்தில் ஆரோக்கியாமாக இருக்க நம் முன்னோர்கள் மூலிகையில் கசாயம் செய்து குடித்து வந்தனர். அப்படியான மூலிகைகளை வைத்து கசாயம் செய்வது எப்படி என்பதை இதில் காண்போம்.
நாம் தினமும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் மசாலா பொருட்களில் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை இருப்பதால் அது உங்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றது.
கஷாயத்திற்கு தேவையான பொருட்கள்...
 • வெற்றிலை 1
 • மிளகு அரை ஸ்பூன்
 • சீரகம் அரை ஸ்பூன்
 • இஞ்சி சிறிதளவு
 • வேப்பிலை தளிர் சிறிதளவு
 • துளசி 8 இலைகள்
 • கற்பூரவல்லி 8 இலைகள்
 • மஞ்சள்பொடி சிறிதளவு
 • பனங்கற்கண்டு 2 ஸ்பூன்
செய்முறை
 • ஒரு லிற்றர் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் மிளகு மற்றும் சீரகத்தை தட்டிப் போடவும்.
 • பின்பு இஞ்சி, வேப்பிலை, துளசி, கற்பூரவல்லி இலைகளைப் போட்டு கொதிக்க விடவும்.
 • கடைசியாக மஞ்சள் பொடியினை சேர்க்கவும். பின்பு பனங்கற்கண்டு சிறிதளவு சேர்க்கவும்.
 • இறுதியாக ஒரு லிற்றர் தண்ணீர் அரை லிற்றராக வந்த பின்பு இறக்கி பின்பு பருகவும்.

Related News