இறுதி நிமிடத்தில் காப்பாற்றப்பட்ட ஜப்பான் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம்… பின்ணனியில் பகீர்..!

லண்டனில் உள்ள ஹித்ரோ விமான நிலையத்தில் இருந்து ஜப்பான் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஒன்று ஜப்பானின் டோக்கியோ நோக்கி கிளம்ப தயாராக இருந்தது. இந்த விமானத்தில் 244 பயணிகள் வரை பயணிக்க இருந்தனர்.
இந்த விமானத்தை இயக்க இருந்த துணை விமானியான கட்ஷுடோசி ஜிட்சுகவா (42) என்பவர் முழு குடிபோதையில் இருந்துள்ளார். விமான நிலையத்தில் உள்ள பேருந்தின் ஓட்டுனர் ஒருவர் ஜிட்சுகவாவுடன் பேசிய போது அவர் மது அருந்தியிருப்பதை கண்டுப்பிடித்தார்.
இது குறித்து உடனடியாக அவர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்த நிலையில் ஜிட்சுகவாவிடம் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது ஒரு விமானி அருந்தவேண்டிய மதுவின் அளவை விட 10 மடங்கு மதுவை ஜிட்சுகவா குடித்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து உடனடியாக அவர் கைது செய்யப்பட்டார். ஜிட்சுகவாவின் தண்டனை விபரம் வரும் 29-ஆம் தேதி அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.
ஜிட்சுகவாவின் செயல் காரணமாக விமானமானது 69 நிமிடங்கள் தாமதமாக கிளம்பி சென்றது. விமானியின் செயலுக்காக பயணிகளிடம் ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.-source : dailythanthi
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

வேட்டையாட வந்த சிறுத்தையை ஓட விட்ட தில்லான நாய்... வைரலான வீடியோ


Related News