ஆசிரியரை கொலை செய்வதற்கு முன் வாகனத்தில் ஏமாற்றி அழைத்து சென்ற அதிர்ச்சி காட்சி..!

ஆசிரியரை கொலை செய்வதற்கு முன் வாகனத்தில் ஏமாற்றி அழைத்து சென்று அதிர்ச்சி காட்சி..!
கும்பகோணத்தில் ஆசிரியை ஒருவரை, காதலன் நடுரோட்டில் கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது கும்பகோணத்தை சேர்ந்த வசந்த பிரியா என்பவர் பள்ளி ஆசிரியராக வேலை செய்து வருகிறார்.

இவரும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த தூரத்து உறவினரான நந்தக்குமார் என்பவரும் சில மாதங்களாக காதலித்து வந்ததாகவும் தெரிய வந்து உள்ளது. நந்தக்குமார் ஆசிரியர் வசந்த பிரியாவிடம் பல முறை தன்னையே திருமணம் செய்துக்கொள்ளும் படி பலமுறை டார்ச்சர் செய்து உள்ளார். ஒரு கட்டத்தில் இவருடைய டார்ச்சர் தாங்க முடியாமல் காதலை ஏற்றுக்கொள்ள பயந்து உள்ளார் வசந்த பிரியா.

பின்னர் நாம் இருவரும் திருமணம் செய்துக்கொண்டால் நல்லா வாழ முடியாது. இருவருக்குள்ளும் அதிக கருத்து வேறுபாடு ஏற்படும் என கூறி அவரை சமாதானம் செய்து வைத்து, சில நாட்களாக நந்த குமாரிடம் பேசுவதை தவிர்த்து வந்து உள்ளார்.

இந்நிலையில், கடந்த 5 நாட்களுக்கு முன்னதாக, வசந்த பிரியாவிற்கு வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் செய்து வைத்து உள்ளனர். இதனை அறிந்துக்கொண்ட நந்தகுமார் கடைசியாக உன்னிடம் பேச வேண்டும். ஒரே ஒரு முறை மட்டும் வந்து என்னை நேரில் சந்தித்து விட்டு போ என கெஞ்சி கேட்டு உள்ளார். இவரின்  பேச்சை கேட்டு நேரில் வந்த வசந்த பிரியாவை, அவர் வேலை செய்யும் பள்ளியிலிருந்து இருசக்கர வாகனம்  மூலம் இருவரும் சென்று உள்ளனர்.
பின்னர் நடுரோட்டில் திடீரென கத்தியை எடுத்து குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்று உள்ளார் நந்தகுமார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, அங்கு விரைந்து வந்த போலிசார், வசந்த பிரியாவின் மொபைல் போனை கைப்பற்றி நந்தக்குமாரிடம் அதிகம் பேசி உள்ளதை கண்டறிந்து நந்த குமாரை கைது செய்து செய்தனர்.
இவரிடம் விசாரணை செய்ததில் இந்த  அனைத்து விவரமும் தெரிய வந்து உள்ளது. இந்த விவகராம் அந்த பகுதியிலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

Related News